May 4, 2012

பிள்ளைகள் முன்னிலையில் இதெல்லாம் செய்யாதிங்க...


குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?
  • கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  • குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

May 3, 2012

எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட தேவையில்லை!!!

நண்பர்களே, நீங்கள் எல்லோரும் சர்க்கரை நோயை பற்றி கவலைபடாதீர்கள். ஏன் என்றால் உலகில் சர்க்கரை நோய் செயற்கையாக மருந்து கம்பனிகளால் ஏற்படுத்தப்பட்டது. நீங்கள் ஒரு ஆறு மணி நேரம் செலவழித்தால் எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட தேவையில்லை .

நீங்கள் அந்த ஆறு மணி நேரத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்ய தேவையில்லை. உங்களின் வேலை ஆறு மணி நேரம் ஒரு வீடியோவை பார்ப்பதுதான். நீங்கள் இன்சுலின் போட்டுகொண்டிருந்தாலும் கூட அடுத்த நிமிடத்தில் இருந்து நீங்கள் இன்சுலின் போட தேவையில்லை. 

நான் ஒரு சர்க்கரை நோயாளி. நான் ஐந்து வருடம் இன்சுலின் போட்டுக்கொண்டேன். ஆனால் இப்பொழுது மூன்று நேரமும் இனிப்பையே சாப்பிடுகிறேன், இன்சுலின் போடாமல் என்கிறார். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவருடைய என்ற வலைதளத்திற்கு சென்று ஒரு ஆறு மணி நேர வீடியோவை பார்பதுதான். 

இது முற்றிலும் இலவசம் . நீங்கள் பார்த்துவிட்டு அந்த தமிழ் பையன் பாஸ்கருக்கு நன்றி சொல்லுங்கள். வாழ்க வளமுடன் . 

April 26, 2012

நமக்கு தெரிஞ்சதுதான்!!!


  • RBC 20 நொடியில் உலகை.... சாரி ...உடலை ஒரு முழு ரவுண்ட் அடித்து விடும்
அந்த நேரத்துல மாமூல் ஏதானும் frவசூல் பண்ணுமா?


  • முப்பத்திரண்டு பல்லையும் உடைச்சிடுவேன்னு நாய் கிட்ட சொல்ல முடியாது, ஏன்னா அதுக்கு நாற்பத்திரண்டு பற்கள்.

நாயினுடைய ஒரு பல்லைக் கூட நம்பளால உடைக்க முடியாது. அதுக்குள்ள அது நம்மைக் கடிச்சிடுமே!


  • லிபர்டி சிலையின் ஆள்காட்டி விரல் எட்டு அடி நீளம்.
ஒரு முழம் பூ வாங்கினா கூட அதை லிபர்டி கையாலத்தான் வாங்கணும்னு நான் சொல்றேன்!

April 4, 2012

இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்


மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில்இன்வெர்ட்டர்களைவிற்கும் நிறுவனங்களும்வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம்ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில்இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து இன்வெர்ட்டர் இன்ஜினீயரும் கொங்கு இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான கே.பெரியசாமியிடம் கேட்டோம்.

February 12, 2012

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?


இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.
காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.
பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.

February 11, 2012

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?

சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!

அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.

காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

February 8, 2012

குர்ஆன் குறித்து நபிமொழிகள்!!!


1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். 
(அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத்(ரலி) – ஆதாரம் : முஸ்லிம்) 

2. குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) 

February 3, 2012

அப்படியென்ன பேச்சு வேண்டி கிடக்கு?


நாட்டின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் மட்டும் 94.7 (1.07%) லட்சம் அதிகரித்து 89.38 கோடியானது. நவம்பரில் இது 88.43 கோடியாக இருந்தது. 

எம்.பி.பி.எஸ் முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து. ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில்அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

January 31, 2012

உங்க வீட்ல ரீஃபைண்ட் ஆயில் Use பண்றீங்களா.? அப்ப இதை கட்டாயம் படிங்க..

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்., நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

January 18, 2012

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே...

திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்! பெப்பர் ஸ்ப்ரே. அப்படினா... என்ன! ? என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ



"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'. ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.
Pages 9« 23456789 »
 
வருகைத்தந்தவர்கள்