:

July 10, 2014

சிங்கப்பூரில் சவுதி ஆரேபியா குறித்த கண்காட்சி


சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தில் சவுதி ஆரேபியா குறித்த கண்காட்சி ஒன்று ஜூன் 6 தொடங்கி ஜூலை 27 வரை நடைபெறுகிறது .

நூலகத்தின் 10 வது மாடியில் மாதிரி ஒட்டகம் ஒன்று வரவேற்கிறது . மக்கா குறித்த பல்வேறு காலகட்ட புகைப்படங்கள் வரிசைப் படுத்தப்பட்டு இருக்கின்றன .


கிபி 570 தொடங்கி 2010 வரை சவுதியில் இஸ்லாமிய நாகரிகம் கடந்து வந்த பயணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .

June 30, 2014

இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் பொதுவான கேள்விகள்....

கேள்வி 1:

ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?

பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)

நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.
தவ்ராத் - மூஸா(அலை) - Moses (Pbuh)
ஸபூர் - தாவூத்(அலை) - David (Pbuh)
இன்ஜீல் - ஈஸா(அலை) - Jesus (Pbuh)
குர்ஆன் - முஹம்மது(அலை) - Muhammed (Pbuh)

June 21, 2014

பயனுள்ள சமையல் குறிப்புக்கள்


சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

June 7, 2014

குழந்தைகளுக்கான சில பயனுள்ள அறிவுரைகள்...

சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மறைத்து விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்
குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளாத வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

June 5, 2014

உங்கள் பேஸ்புக் பக்கத்தை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி? (வீடியோ)

உங்கள் பேஸ்புக் பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு எளிமையாக ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே கூறியதை பின்பற்றவும்…
முதலில் உங்களுடைய முகநூல் கணக்கில்(facebook account) நுழையுங்கள் (login). பிறகு உங்களுடைய முகநூல் பக்கத்திற்கு (your profile page) செல்லுங்கள்.

May 26, 2014

வெள்ளை மாளிகைக்கு எதிரே ஒரு சின்னக்குடில்

வாஷிங்டன் டி.சி உலகின் அதிகார பீடமான அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு எதிரே ஒரு சின்னக் குடில்.
வெள்ளை மாளிகையை புகைப்படம் எடுப்பவர்களை விட அங்குள்ள ஒரு பாட்டியோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அத்தனை பேரும் ஆசைப்படுகிறார்கள் . அவர் பெயர் கொன்சிட்டா ( Concepción Picciotto ) அவரது குடில் முழுக்க வாசகங்கள் பதித்த பதாகைகள் , அச்சிடப்பட்ட தாள்கள்,பல்வேறு செய்தித் தாள் பிரதிகள்,அவரது தொப்பி,அவரது உடை ,அவரது நீர் அருந்தும் பானை அத்தனையிலும் போராட்ட வாசகங்கள் .
கடந்த 34 ஆண்டுகளாக அணு சக்திக்கு எதிராக ,அணு ஆயுதங்களுக்கு எதிராக ,அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உலகம் முழுக்க நடைபெறும் அணுசக்திக்கு எதிரான போராட்டங்களுக்கு மிக முக்கிய அடையாளமாக திகழ்கிறார். ஸ்பெயினில் பிறந்து , மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர் .

April 18, 2014

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை...

வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

வருகையாளர்கள்

 

Copyright 2010 - 2014 All Rights Reserved | Riyaz Home Page

வருகைத்தந்தவர்கள்