January 18, 2012

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே...

திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்! பெப்பர் ஸ்ப்ரே. அப்படினா... என்ன! ? என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் இதோ



"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'. ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.
அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொன்னால் போலீஸ் வந்து அவர்களை அள்ளிக் கொள்ளும்! "அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.

சமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' காவல்துறை வழங்கி வருகிறது. இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபது முறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.

முதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தபட்டு வருகிறது. இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் காவல்துறைக்கு வந்திருக்கின்றன.

இதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும் இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது!" .

இந்த பெப்பர் ஸ்ப்ரே காவல் துறை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது. இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள்,பெண்கள் என அனைவரும் பயன் பெறலாம்..

அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத்துல இருந்து தப்பிக்க இது ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருக்கும்.

மேலும் தொடர்புக்கு:

துரைப்பாக்கம் சரகம்,
காவல்துறை உதவி ஆணையர்
அலுவலகம்,
போன்-044--2345277



நன்றி:- நாகூர்கனி காதர் 

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்