Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts

May 7, 2018

மிகப் பிரபலமான சில கண்டுபிடிப்புகள் தற்செயலாகத் தான் கண்டு பிடிக்கப்பட்டன!

அறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில் என்ன விசேஷம் என்றால், 

இறந்தகாலங்களில் எவ்வளவோ திட்டமிடப்படாத கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தான். என்ன புரியவில்லையா? ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக வேறு ஏதோ ஒரு விஷயத்தைக் 
கண்டுபிடித்துள்ளார்கள். இப்படித் தற்செயலாகக் கண்டுபிடிக்கப் பட்ட 5 மிகப் பிரபலமான கண்டுபிடிப்புகளைப் பற்றி சொல்லவா?

April 12, 2018

வேற ஸ்கூல்ல சேர்க்க டிசி தரமாட்டோம்னு பயமுறுத்துறாங்களா? கவலை வேண்டாம்

பல பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழ் நிலையில், சில பள்ளிக் கூடங்கள், வேறு பள்ளியில் சேரப் போகும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் T.C தர மறுக்கின்றன.

February 28, 2018

தேசிய அறிவியல் தினம் இன்று!

தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்தது. சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு (Raman Effect) என்கிற ஆராய்ச்சி முடிவை 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியிட்டார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1987ஆம் ஆண்டு அன்றைய பிரதமரின் ஒப்புதலோடு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்  சர். சி. வி ராமன் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது

February 18, 2018

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா!!

வாங்க நண்பர்களே!!
தலைப்பை பார்த்து பயந்துடாதீங்க!!.
தெரியாததை தெரிந்துக்கொள்வதுதான் நம்ம பழக்கம். அதனால கீழே கொடுத்துள்ள கேள்விக்காண, பதிலை கிளிக் பண்ணுங்க. கவலைப்படாதீங்க இங்கு மார்க்கெல்லாம் கொடுக்க மாட்டோம். தெரியாததை தெரிஞ்சிக்குவோம். அவ்வளவு தான்



1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது?


February 8, 2018

உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டதா?

ஆதார் கார்டு தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது. முதலில் ஆதார் கார்டை வாங்குவதில் சிக்கல் இருந்தது. அதன் பின், போலி ஆதார் கார்டுகள் எனப் பல லட்சம் கார்டுகளை அரசே கேன்சல் செய்தது. அதன்பின், ஆதார் கார்டின் தகவல்கள் பல இடங்களில் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. ஆனால், இதுவரையில் ஒருமுறைகூட பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் ஹேக் செய்யப்படவில்லை; லீக் ஆகவில்லை என UIDAI அமைப்பு உறுதியாகத் தெரிவித்தது. 

November 27, 2017

ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..!


ஒட்டகத்தைப்பற்றி ஓரளவுகூட அறியாத ஐரோப்பியர்களால் சொல்லப்பட்ட தவறான உவமானம்தான் ‘பாலைவனக்கப்பல்’.

ஏனென்றால், " 'சஃபீனத்-அஸ்-ஸஹாரா ' என்று எந்த பண்டைய அரபி இலக்கியங்களிலாவது எழுதப்பட்டு இருக்கிறதா?" என்றால்... அரபிகள் முழிக்கிறார்கள். ஏதோ சில ஆங்கில அறிவு பெற்றவர்களுக்கு மட்டும் ‘தெ ஷிப் ஆப் தெ டெசெர்ட்’ என்றால் தெரிந்திருக்கிறது. அநேகமாய், தங்கள் மகத்தான கண்டுபிடிப்பான ‘கப்பலில்’, மத்தியதரைக்கடலை கடந்து வடக்கு ஆப்பிரிக்காவில் கால்வைத்த ஐரோப்பியர்கள், ஒட்டகத்தையும் பாலைவனத்தையும் முதன்முதலாக  பார்த்துவிட்டு.. ‘கடலுக்கு கப்பல்பிரயாணம் - பாலைக்கு ஒட்டகபிரயாணம்’ என்று மட்டுமே உணர்ந்து சொன்ன வாக்கியமாக இருக்கலாம்.

September 30, 2016

பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கிறது - அறிவியல் பதிவு.

(நமது) வலிமையால் வானத்தைப்படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவு படுத்துவோராவோம்.  (திருக்குர்ஆன் 51:47)

இவ்வசனத்தில் வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

நாம் வாழ்கின்ற பிரபஞ்சம் அது தொடர்ச்சியாக விரிவடைந்து  கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

திருக்குர்ஆன் கூறும் இந்த உண்மையை 20 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் ஃப்ரைட்மன்
என்பவரும்,  பெல்ஜியம் அறிஞர் ஜார்ஜியஸ் லமைட்ரெ என்பவரும் கண்டறிந்துள்ளனர்.

June 9, 2016

ஈக்களை பற்றிய அறிவியல் பதிவு.

உங்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது! ( திருக்குர்ஆன் 22:73)
ஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய அறிவியல் பதிவை இன்று நாம் பார்ப்போம். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் : “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர் மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.

September 22, 2015

மக்கா உருவான வரலாறு!!!


1) முதல் மனிதர் ஆதம் அவரது மனைவி ஹவ்வா அவர்கள் பூமியில் இறக்கபட்ட இடம் மக்காவாகும். 

2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்.

3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது.

4) அதற்க்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர்.. உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர்.. ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிபடை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது.

May 21, 2015

சிங்கப்பூரார்களை நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது வெகு சிரமம்.

சிங்கப்பூரில் இருபது வயது நிரம்பிய ஒரு இளைஞனை மற்ற நாட்டு இளைஞர்கள் நேருக்கு நேர் மோதி ஜெயிப்பது வெகு சிரமம்.
ஏன் என்று கேட்கிறிர்களா....? 
இதோ அதற்கான விடை...

சிங்கப்பூர்வாசிகளின் பிள்ளைகள் அனைவரும் 18 வயதை தொடும்போது மூன்றாண்டுகள் அவர்கள் கட்டாய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டே ஆகவேண்டும். இதற்கு National Service- தேசிய சேவை என்று பெயர்.

இதில் பணக்கார வீட்டு பிள்ளைகள், ஏழை வீட்டு பிள்ளைகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பிரதமர் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டே ஆக வேண்டும்.

July 10, 2014

சிங்கப்பூரில் சவுதி ஆரேபியா குறித்த கண்காட்சி


சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தில் சவுதி ஆரேபியா குறித்த கண்காட்சி ஒன்று ஜூன் 6 தொடங்கி ஜூலை 27 வரை நடைபெறுகிறது .

நூலகத்தின் 10 வது மாடியில் மாதிரி ஒட்டகம் ஒன்று வரவேற்கிறது . மக்கா குறித்த பல்வேறு காலகட்ட புகைப்படங்கள் வரிசைப் படுத்தப்பட்டு இருக்கின்றன .


கிபி 570 தொடங்கி 2010 வரை சவுதியில் இஸ்லாமிய நாகரிகம் கடந்து வந்த பயணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .

June 30, 2014

இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் பொதுவான கேள்விகள்....

கேள்வி 1:

ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?

பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)

நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.
தவ்ராத் - மூஸா(அலை) - Moses (Pbuh)
ஸபூர் - தாவூத்(அலை) - David (Pbuh)
இன்ஜீல் - ஈஸா(அலை) - Jesus (Pbuh)
குர்ஆன் - முஹம்மது(அலை) - Muhammed (Pbuh)

June 21, 2014

பயனுள்ள சமையல் குறிப்புக்கள்


சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

June 7, 2014

குழந்தைகளுக்கான சில பயனுள்ள அறிவுரைகள்...

சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மறைத்து விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்
குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளாத வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

May 26, 2014

வெள்ளை மாளிகைக்கு எதிரே ஒரு சின்னக்குடில்

வாஷிங்டன் டி.சி உலகின் அதிகார பீடமான அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு எதிரே ஒரு சின்னக் குடில்.
வெள்ளை மாளிகையை புகைப்படம் எடுப்பவர்களை விட அங்குள்ள ஒரு பாட்டியோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அத்தனை பேரும் ஆசைப்படுகிறார்கள் . அவர் பெயர் கொன்சிட்டா ( Concepción Picciotto ) அவரது குடில் முழுக்க வாசகங்கள் பதித்த பதாகைகள் , அச்சிடப்பட்ட தாள்கள்,பல்வேறு செய்தித் தாள் பிரதிகள்,அவரது தொப்பி,அவரது உடை ,அவரது நீர் அருந்தும் பானை அத்தனையிலும் போராட்ட வாசகங்கள் .
கடந்த 34 ஆண்டுகளாக அணு சக்திக்கு எதிராக ,அணு ஆயுதங்களுக்கு எதிராக ,அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உலகம் முழுக்க நடைபெறும் அணுசக்திக்கு எதிரான போராட்டங்களுக்கு மிக முக்கிய அடையாளமாக திகழ்கிறார். ஸ்பெயினில் பிறந்து , மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர் .

April 18, 2014

தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

ஒரு வாக்காளனாக நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சில அம்சங்கள் உள்ளன. அவை, வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பு சரிசெய்துகொள்ள வேண்டியவை; இயந்திரத்தில் பொத்தானை அழுத்தும் முன்பு சிந்திக்க வேண்டியவை...

வாக்களிப்பது மிக முக்கியம். 2009- ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 72.98 சதவிகித வாக்குகள் பதிவாகின. அது ஒரு சாதனை அளவு. 1967-ல் பதிவான 76.59 சதவிகித வாக்குப்பதிவுக்குப் பிறகு 2009-ல் பதிவானதுதான் அதிகபட்சம். மற்றபடி எல்லா ஆண்டுகளும் வாக்குப்பதிவின் விகிதம் வீழ்ச்சி அடைந்துகொண்டேதான் வருகிறது. இதன் உண்மையான பொருள் என்னவெனில், சுமார் 40 சதவிகிதம் மக்களின் பங்கேற்பு இல்லாமல்தான் மக்களாட்சி நடைபெறுகிறது. இந்த நிலை மாற, காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

January 12, 2014

ஆன்லைன் ஷாப்பிங்... உஷார் டிப்ஸ்!

எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா
”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே  செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட  TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.
கவர்ச்சி விளம்பரங்கள்!
கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய்

September 23, 2013

நிறுத்த வேண்டிய சில விஷயங்கள்...

நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்..

1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2 யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டுபோடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து ,பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

August 4, 2013

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிகளின் தியாகம்

வரலாற்றை படிங்கள் தெரியாதவர்களுக்கு தெரியபடுதுக்கள் பெருமையோடு !!!!!!!

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் நினைக்கலாம் ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.

(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

மாவீரன் திப்பு சுல்தான்:

July 16, 2013

நம்ம ஏர்போர்ட்டா இது!!!

அதிசயிக்க வைக்கும் சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையம்!

சென்னை: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அப்போது இதனைப் பயன்படுத்திய பயணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர். சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச தரத்தில், அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
 
வருகைத்தந்தவர்கள்