(நமது) வலிமையால் வானத்தைப்படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவு படுத்துவோராவோம். (திருக்குர்ஆன் 51:47)
1929 ஆம் ஆண்டு தொலைநோக்கியின் மூலம் எட்வின் ஹப்பிள் என்பவர் பிரபஞ்சம் விரிவதைக்கண்டுபிடித்துள்ளார்.
இவ்வசனத்தில் வானத்தை நாம் படைத்து அதை விரிவுபடுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
நாம் வாழ்கின்ற பிரபஞ்சம் அது தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
திருக்குர்ஆன் கூறும் இந்த உண்மையை 20 ஆம் நூற்றாண்டில்வாழ்ந்த ரஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் ஃப்ரைட்மன்
என்பவரும், பெல்ஜியம் அறிஞர் ஜார்ஜியஸ் லமைட்ரெ என்பவரும் கண்டறிந்துள்ளனர்.
பெருவெடிப்புக் கொள்கையின் (Big Bang) போது விரிய ஆரம்பித்த பிரபஞ்சம் இன்று வரை விரிந்து கொண்டே செல்கிறது. ஒரு பலூனை ஊதினால் அது எல்லாப்புறமும் விரிந்து உப்புவதுபோல் விண்வெளிப் பெருவெளி விரிந்து கொண்டிருக்கிறது.இந்த பேருண்மை யை அல்லாஹ் அல் குர்ஆனில் அன்றே கூறினாலும், அறிவியல் ஆய்வுகள் தற்போதுதான் இதை மெய்பித்து வருகின்றன.
2 - June, 2016 இல் வெளியிடப்பட்ட அமெரிக்கா ஜான் ஹாப்கின் பல்கலைகழக தொலைநோக்கி அறிவியல் (Space Telescope Science Institute and Johns Hopkins University in Baltimore) ஆய்வின்படி,பிரபஞ்சம் விரியும் வேகம்,முன்பு கணிதத்தை விட 5% ல் இருந்து 9% அதிக வேகத்தில் விரைவதாக, இதன் ஆய்வுத் தலைவர்.ஆடம் ரைஸ் அறிவித்துள்ளார்.இவர் கடந்த 2011 ம் ஆண்டு இயற்பியல் துறையில்,பிரபஞ்சம் விரியும் வேகத்தின் முடுக்கத்தை ( Universe”s expansion is accelerating)கண்டுபிடித்தமைக்காக நோபல்பரிசு பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வியப்பூட்டும் கண்டுபிடிப்பின் மூலம், இப்பிரபஞ்ச விண்வெளியை 95 % கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும்கருஞ்சக்தி,(Dark energy),கரும்பிண்டம்,(Darkmatter),கருங்கதிர்கள்( Dark radiation), பற்றிய உண்மைகளை புரிந்து கொள்ள உதவும் என்று கூறியுள்ளார். (Ref :- http://phys.org/news/2016-06-hubble-universe-faster.html)
இனியும் இது போல் விரிவடைந்து கொண்டே இருக்கும் என்ற
பேருண்மையை எடுத்துச் சொல்லி, தன்னைத் தானே இறைவேதம் என திருக்குர்ஆன் நிரூபிக்கின்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)