July 10, 2014

சிங்கப்பூரில் சவுதி ஆரேபியா குறித்த கண்காட்சி


சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தில் சவுதி ஆரேபியா குறித்த கண்காட்சி ஒன்று ஜூன் 6 தொடங்கி ஜூலை 27 வரை நடைபெறுகிறது .

நூலகத்தின் 10 வது மாடியில் மாதிரி ஒட்டகம் ஒன்று வரவேற்கிறது . மக்கா குறித்த பல்வேறு காலகட்ட புகைப்படங்கள் வரிசைப் படுத்தப்பட்டு இருக்கின்றன .


கிபி 570 தொடங்கி 2010 வரை சவுதியில் இஸ்லாமிய நாகரிகம் கடந்து வந்த பயணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .

அரபுகளின் கலாச்சாரம் , பண்பாடு , விருந்தோம்பல் , வேட்டையாடுதல் , பொழுதுபோக்கு , பழமை ஆகியன குறித்த பொருள்களும் , காட்சிப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது .

சவுதியின் பிரம்மாண்டமான சாலை அமைப்புகள் , வானுயர்ந்த கட்டிடங்கள் , தொழிற்சாலைகள் , மருத்துவமனைகள் , கல்வி நிறுவனங்கள் , அரசு அலுவலகங்களின் துரித செயல்பாடுகள் , முன்னேற்ற திட்டங்கள் குறித்த ஆவணப்படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கிறது .
சவுதி ARAMCO நிறுவனத்தின் சார்பில் , சவுதியின் எண்ணெய் வளம் , அது சார்ந்த ஏற்றுமதி , துறைமுக செயல்பாடுகள் , கடல்வளம் , விமான நிலைய செயல்பாடுகள் ஆகியவற்றை விளக்கி மற்றொரு ஆவணப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .

1972 -ல் 60 சதவிகிதம் பேர் கல்வி அறிவில் பின் தங்கி இருந்ததையும் , 2013-ல் அது 4சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருப்பதை பெருமையாக குறிப்பிடுகிறார்கள் . 1970- ல் நான்கு பல்கலைக்கழகம் மட்டுமே இருந்ததாகவும் , 2014 -ல் 499 சிறப்புப்பாடப் பிரிவுகளோடு 30 தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட 36 பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

King Abdullah Scholarship Program மூலம் 46 நாடுகளில் 1இலட்சத்து 30ஆயிரம் பேர் கல்வி பயின்று இருப்பதாகவும் அதில் 20 சதவிகிதம் பெண்கள் என்பதாகவும் சாதனை பட்டியல் நீள்கிறது .

தற்போது 58,135 படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவ வசதிகள் 92,000 ஆகவும் , தேசிய மருத்துவமனைகளை 7-லிருந்து 10-ஆகவும் உயர்த்த இருப்பதாகவும் அவை கிழக்கு , தெற்கு , வடக்கு ஆகிய மண்டலங்களில் அமையும் என்றும் கோடிட்டு காட்டுகிறார்கள் .

18மில்லியன் பேரிச்சைத் தோட்டங்கள் , உலக எண்ணெய் ஏற்றுமதியில் 25 சதவிகித பங்கு , 955 மில்லியன் கியுபிக் அளவிற்கு கடல்நீரை குடிநீராக மாற்றிய சாதனை , உலகின் மிகப்பெரிய சூரிய மின் சக்தி உற்பத்தி , 2013-ல் 936 பில்லியன் சிங்கப்பூர் டாலரில் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி உலகின் 19-வது பெரிய பொருளாதார நாடு என்ற அங்கிகாரம் ஆகியவற்றையெல்லாம் வரிசைபடுத்தி இருக்கிறார்கள் .

பொருளாதார வளத்தில் சுவிடன் , சுவிஸ்சர்லாந்து , நார்வே போன்ற நாடுகளை சவுதி அரேபியா முந்தி இருக்கிறது .

உலகின் மிகப்பெரிய Kingdom Tower , Metro Rail போக்குவரத்து , நிதி மேலாண்மை மாவட்டம் , பொருளாதார நகரம் , பெட்ரோலிய கல்வி மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட எதிர்கால வளர்ச்சி திட்டங்களையும் பட்டியலிட்டிருக்கிறார்கள் .

சவுதியை பற்றிய பன்முக புரிதலுக்கு இக்கண்காட்சி வழிகாட்டுகிறது . சவுதிக்கும் சிங்கப்பூருக்கும் இடையேயான வணிக ஒப்பந்தங்கள் , தூதரக உறவுகள் குறித்தும் நிறைவு பகுதியில் வரைந்திருக்கிறார்கள் .

பார்வையாளர்களுக்கு இலவச புத்தகங்கள் கிடைக்கின்றன .

நாங்கள் போய்இருந்த போது பல இன மக்களும் பார்வையாளர்களாக வந்திருந்தனர் .

இரண்டு மணிநேரம் சவுதியை சுற்றி வந்தது போல இருந்தது


நன்றி  : தமீமுன் அன்சாரி 

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்