வாஷிங்டன் டி.சி உலகின் அதிகார பீடமான அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு எதிரே ஒரு சின்னக் குடில்.
வெள்ளை மாளிகையை புகைப்படம் எடுப்பவர்களை விட அங்குள்ள ஒரு பாட்டியோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள அத்தனை பேரும் ஆசைப்படுகிறார்கள் . அவர் பெயர் கொன்சிட்டா ( Concepción Picciotto ) அவரது குடில் முழுக்க வாசகங்கள் பதித்த பதாகைகள் , அச்சிடப்பட்ட தாள்கள்,பல்வேறு செய்தித் தாள் பிரதிகள்,அவரது தொப்பி,அவரது உடை ,அவரது நீர் அருந்தும் பானை அத்தனையிலும் போராட்ட வாசகங்கள் .
கடந்த 34 ஆண்டுகளாக அணு சக்திக்கு எதிராக ,அணு ஆயுதங்களுக்கு எதிராக ,அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உலகம் முழுக்க நடைபெறும் அணுசக்திக்கு எதிரான போராட்டங்களுக்கு மிக முக்கிய அடையாளமாக திகழ்கிறார். ஸ்பெயினில் பிறந்து , மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர் .
ஏன் அணு சக்தியை எதிர்க்கிறீர்கள் , வெள்ளை மாளிகை நிர்வாகம் உங்களை வெளியேற்றவில்லையா , அணு உலைகள் இல்லை என்றால் எப்படி மின்சாரம் வரும் எனப் பலரும் பலக் கேள்விகளை கேட்கிறார்கள் .அத்தனை பேருக்கும் 34 ஆண்டுகளாக சலிக்காமல் பதில் சொல்லி வருகிறார்.
"உங்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லையா ?
நீங்கள் அவர்களைப் பாதுகாக்கவில்லையா ?
அவர்களுக்காக உழைக்கவில்லையா " என்று சத்தமாக கேட்டேன்.
கொன்சிட்டா பாட்டி சொன்னார்
" இந்த பூமி தான் என் வீடு, நீங்கள் தான் என் குடும்பம் .
வேறென்ன வேண்டும் எனக்கு ? இந்தா இந்த நோட்டிசை உங்கள் நாட்டில் கொண்டு போய் மக்களிடம் கொடு என்று அணு சக்தி எதிர்ப்பு காகிதங்களைக் கொடுத்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)