- RBC 20 நொடியில் உலகை.... சாரி ...உடலை ஒரு முழு ரவுண்ட் அடித்து விடும்
அந்த நேரத்துல மாமூல் ஏதானும் frவசூல் பண்ணுமா?
- முப்பத்திரண்டு பல்லையும் உடைச்சிடுவேன்னு நாய் கிட்ட சொல்ல முடியாது, ஏன்னா அதுக்கு நாற்பத்திரண்டு பற்கள்.
நாயினுடைய ஒரு பல்லைக் கூட நம்பளால உடைக்க முடியாது. அதுக்குள்ள அது நம்மைக் கடிச்சிடுமே!
- லிபர்டி சிலையின் ஆள்காட்டி விரல் எட்டு அடி நீளம்.
ஒரு முழம் பூ வாங்கினா கூட அதை லிபர்டி கையாலத்தான் வாங்கணும்னு நான் சொல்றேன்!
- ஒரு எழுபத்தைந்து வயது மனிதன் சுமார் இருபத்து மூன்று வருடம் தூக்கத்தில் கழித்திருப்பான்.
அப்படியா? இப்பிடி சொன்னா எங்களுக்கு என்ன தெரியும்? அவரோட பேரு, ஊரு எல்லாம் சொல்லுங்க.
- கங்காருவால் பின்னால் நடக்க முடியாது.
- பில் கிளிண்டன் தன் ஜனாதிபதி பதவி காலத்தில் இரண்டே இரண்டு ஈ மெயில்தான் அனுப்பி இருக்கிறாராம்.
ஆமாம் - அவரு தன்னுடைய காரியதரிசிகூட எப்பவுமே பிசியா இருந்தார்னு சொன்னாங்க.
- ஆக்டோபசுக்கு மூன்று இதயங்கள்.
அப்போ ஆக்டோபஸ் வெச்சி தமிழ் சினிமா எடுத்தா முக்கோணக் காதல், இல்லை - நாற்கோணக் காதல் என்று நவகோணக் காதல் வரை எடுக்கலாம்.
- Sperm Whales என்ற ஒருவகைத் திமிங்கிலத்துக்குதான் பெரிய மூளை. 20lb.
எடை அதிகமிருந்து என்னங்க பிரயோஜனம்? சுவை எப்பிடி இருக்கும் என்று கேட்கிறார் - ஒரு அசைவப் பிரியர்.
- Tiger Shark என்ற சுறா வகை தாயின் கருவில் முட்டையாக இருக்கும்போதே ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டு அழித்துக் கொள்ளும். மிஞ்சுவதுதான் பிறக்கும்.
பிறந்தபின் இரண்டிரண்டாகச் சேர்ந்து - இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுமோ?
- Blue Whale திமிங்கிலத்தின் நாக்கு ஒரு யானையை விட எடை கூடியது.
அடேங்கப்பா - படிக்கும்போதே நாக்குத் தள்ளுது, கண்ணைக் கட்டுதே!
- மூங்கில் இருபத்துநாலு மணி நேரத்தில் மூன்று அடி வளரும்.
எங்கள் பள்ளி ஆசிரியர் கையில் உள்ள மூங்கில் குச்சி ஒரு மணி நேரத்தில் இருபத்து நாலு அடி போடும்.
- உலகின் மிகப் புகழ் பெற்ற செவிலி Florence Nightingale தன் வாழ்வில் மொத்தம் மூன்று வருடங்கள் மட்டுமே நர்சாக இருந்திருக்கிறார்.
நம்ம ஊருல - ரொம்பப் பேருங்க செவிலித் தகுதி கூட இல்லாமல் டாக்டர் ஆயிடுராங்களே. இதுக்கு அது எவ்வளவோ மேல்.
நன்றி :- எங்கள் ப்ளாக்
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)