நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கிறது. நகங்களை நலமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...
* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது.
* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.
* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணையை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.