December 22, 2011

யோகாசனம் செய்ய வேண்டுமா?

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற் பயிர்சி    தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும்.  யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் சொல்கின்றன. இருந்தாலும் இதை இதை நாம் உடல் பயிற்சிக்காக செய்யலாம். 


ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 
  • இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் “பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்” என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.
  • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக  கூறுகின்றனர்.
  • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை   அளிக்கும்  இந்த யோகாசனங்கள்.
  • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
  • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந் தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச் சியோடு இருக்கலாம்.
  • இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள் ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.
யோகாசனங்கள் பல இருந்தாலும் சில முக்கியமானதை மட்டும் இங்கு காண்போம்
பத்மாசனம்

நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகா நிமிர்ந்து  உட்காரவும். நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக  இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.

பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்கபடும், கூன் முதுகுசரியாகும், உடலில் சுறு சுறுப்பு உண்டாகும்.

தணுராசனம்

குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும்.  இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற் சியை செய்ய லாம்.
பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.

சிரசாசனம் 

தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும்.  இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கண்டிப்பாக செய்யகூடாது.

பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல் லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப் பாகும்.
வஜ்ராசனம் :


இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 

பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமா குதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.

விபரீதகரணி

நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்க வாட்டில் இறுகப்பிடித்து கொள்ள வேண்டும்.  

பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும். 


புஜங்காசனம் 


தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்ககூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.

பச்சிமோத்தாசனம்

இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கை விரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ள வேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்
மேற்கண்ட யோகாசனத்தில் ஏதானும் சந்தேகம் இருப்பின் தெரிந்தவரிடம் முறையாக கற்றுக்கொள்ளுங்கள். 

3 கருத்துரைகள்:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.
நவீனமாகிவிட்ட இன்றைய உலகிற்கு நிச்சயம் இது ஒரு பயனுள்ள நல்ல கட்டுரை,தொடரட்டும் உங்கள் முயற்சி இன்ஷா அல்லாஹ் ..

எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்...

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

Abu Nadeem said...

வ அழைக்கும் வஸ்ஸலாம்.
உங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே! அடிக்கடி என் Blog க்கு வாருங்கள். உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

உங்கள் தளத்தில் நானும் ஒரு உறுபினராகிவிட்டேன்..

xcxdgg said...

நல்ல விஷயம் முயற்சித்து பார்க்கிரண்

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

வருகையாளர்கள்

 

Copyright 2010 - 2019 All Rights Reserved | உங்கள் ப்ளாக்

வருகைத்தந்தவர்கள்