ஹிஜாமா (حجامة) என்றால் என்ன? ஹிஜாமா ('Hijama' Arabic: حجامة lit. "sucking") என்ற அரபி வார்த்தை hajm '(உறுஞ்சுதல்-Sucking) இருந்து பெறப்படுகிறது.
கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற்பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவுகளை உடலின் பல்வேறு இடங்களில் இருந்து வெளியேற்றும் மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார்கள்?
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; 'அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (புகாரி - 5678)