ஆமாம்...! அதிசயம்தான்..! ஆனால் உண்மை..! 'கடல்நீரை எரிக்க முடியும்' என்று அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தி விட்டார்கள்..! ஆக, இனி... கடல்நீர்... எரிபொருள்...!
சென்ற மாதம் என்னுடைய செல்ஃபோன் பற்றிய இடுகைக்காக, பல தளங்களை தேடிப்படித்தபோது, ஒரு தளம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதில் கண்ட 'அந்த அதிசயம்' என்னுடைய அப்பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதால், 'அதை, விபரமாய் பிறகு சாவதானமாய் படித்துக்கொள்ளலாம்' என்று அப்போதைய செல்ஃபோன் பதிவு போடும் அவசரத்தில் புக்மார்க்கில் சேமித்து வைத்து விட்டு... பின்னர் வழக்கம் போல அதை படிக்காமல் மறந்தும் போனேன்..... :)
சில நாட்கள் கழித்து, சகோ.சுவனப்பிரியன், தன் வலைப்பூவில், இறைநம்பிக்கை குறித்த பிற்போக்கு கொள்கைகளையே கொண்ட... கேள்வி கேட்க மட்டுமே தெரிந்த ஒரு பதிவரின் " பின்நோக்கி செல்லும் இரவு " பற்றிய அல் குர்ஆன் வசன கேள்விக்கு, மிக அழகிய முறையில்... தெளிவான விளக்கத்தை சகோ.சுவனப்பிரியன் கொடுத்ததை (இப்பதிவில் அவரின் முதல் பின்னூட்டம்) படிக்க நேர்ந்தது. அந்த வசனம் வந்த அல்குர்ஆன் அத்தியாத்தை கூகுளில் தேடிக்கண்டுபிடித்து அந்த அத்தியாயத்தை முழுதும் படிக்கும்போதுதான்... ஏற்கனவே படித்திருந்தாலும்... அன்று ஏனோ... அதன் ஆறாவது வசனம் என்னை பிடித்து இழுத்து நிறுத்தி திகைக்க வைத்தது..!
காரணம் அந்த அல்குர்ஆன் வசனத்தில் இப்படி வருகிறது :
கடல்கள் தீ மூட்டப்படும் போது... (குர்ஆன் - 81 : 6)
(இதென்ன..! ஆறு, ஏரி, குளம், குட்டை என்று சொல்லப்படாமல் கடல்கள் என்றுமட்டும்..?) அப்போதுதான், பொறிதட்டியது... அடாடா..! அந்த புக்மார்க்..!
உடனே அந்த அதிசயம் சம்பந்தமான புக்மார்க்கை பிடித்து, அந்த தளத்தின் பக்கத்தை தேடி, அதைத்திறந்து மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அதாவது, அதில், John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!
உடனே அந்த அதிசயம் சம்பந்தமான புக்மார்க்கை பிடித்து, அந்த தளத்தின் பக்கத்தை தேடி, அதைத்திறந்து மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அதாவது, அதில், John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!
முதலில் அவர் ஒரு Radio Frequency Generator (RFG) ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ரேடியோ அலைகளை சரியான wavelength/frequency-யில் உற்பத்தி செய்து அதை கேன்சர்/ட்யூமர் செல்களில் சரியான அளவில் துல்லியமாக செலுத்தி அதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, ரேடியோ அலைக்கற்றை பாதையின் அருகே இருந்த ஒரு சோதனைக்குழாயில் தண்ணீர் Condense ஆவதை காணுகிறார். ஆஹா..! அப்படியெனில் கடல்நீரிலிருந்து Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது..! சோதனைக்குழாயில் இருந்த கடல்நீர்... தீ..ப்..ப..ற்..றி.. எ..ரி..ய.. ஆ...ர.. ம்பித்தது..!!
பொதுவாக கடல்நீர் மீது எரியும் தீ பந்தத்தை நாம் எறிந்தால் மொத்த கடல்பரப்பும் பற்றிக்கொள்ளுமா..? இதென்ன புதுக்கேள்வி..? பற்றிக்கொள்ளதுதான்..! ஆனால், இதற்கு காரணமாக இருக்கும் அறிவியல் என்ன என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் சூட்சுமம், ரேடியோ அலைக்கற்றைகளில் மட்டும் இல்லை...! கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது. அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFGவெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது..! ரேடியோ அலைக்கற்றை தொடர்ந்து கடல்நீர் மீது பாய்ச்சப்பட தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கிறது..!
கீழ்க்காணும் வீடியோவில் அப்போது அமெரிக்காவில் வந்த செய்தியையும் இந்த ஆய்வு எப்படி நடந்தது என்ற விளக்கமும் காணுங்கள்.
இச்சோதனையை பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் தனியாக பரிசோதித்து சரிபார்த்துவிட்டு, John Kanzius சொன்னது முற்றிலும் உண்மை என்று நிரூபித்துள்ளனர். RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையை பாய்ச்சும் வரை கடல்நீரை தொடர்ந்து எரிய வைக்கலாம். இத்தீயின் வெப்பம் 3000F வரை கிடைக்கிறது.
டிஸ்கி :-
இனி கடல்நீர் எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றா..? 'ஆம்' என்று உடனே கூற முடியவில்லை..! காரணம், இதில், இப்போதுள்ள ஒரே பிரச்சினை, RFG-க்கு தரப்படும் input energy-க்கான செலவு, தற்போது பெட்ரோல்/டீசலுக்கு செல்வழிப்பதைவிட அதிகமாம். பிற்காலத்தில், இதன் செலவு குறையுமானால், இனி நம் மோட்டார் வாகனங்கள் கடல்நீரில் ஓடுமா.. என்றால் ஓடும்..! ஆனால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் வரும்..? அப்புறம் தினமும் மில்லியன் பேரல் கணக்கில் இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் Oil Refinery-களுக்கு வேலை வேண்டாமா..? ஒரு லோடு லாரி அரிசியை நூறு ரூபாய்க்கு வாங்கி அதை மாவாக்கி பத்து மில்லியன் இடியாப்பம் செய்து விற்று பில்லியனராக வேண்டாமா..? என்னா சகோ..!
முதலில் பூமியில் உள்ள எண்ணெய் வளம் எல்லாம் வற்றட்டும் சகோ..! அப்புறம், உலக மக்கள் எல்லாம் எரிபொருளுக்கு தவிக்கும்போது, ஆபத்பாந்தவனான அமெரிக்காவின், இந்த 'முன்னமே Patent போடப்பட்ட தொழில்நுட்பத்தை' உலக நாடுகள் எல்லாம் கைகட்டி அதற்குரிய கப்பம் கட்டி வாங்கிகொள்வார்கள். இதற்கான... " 4-5-6 (!?)ஒப்பந்தத்தில் " அனைத்து நாட்டு தலைவர்களும் அதற்கு முன்னமேயே கையொப்பமும் போட்டுமிருப்பார்கள் அல்லவா..!
ஆனால், ஒருவிஷயம்...! பாவம்... பல கடற்கரை இல்லாத துரதிர்ஷ்ட நாடுகள்..! அவர்கள் அதிக விலை கொடுத்து மற்றவர்களிடம் எரிபொருளுக்கான "குருட் கடல்நீர்" வாங்குவார்கள். அப்போது கடற்பரப்பும் கூறுபோட்டு விற்கப்படும் அல்லது ஏழை எளிய நாட்டின் கடற்பரப்பு, வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும்..! கடல்நீருக்காக பிற்காலத்தில் போர் கூட நடக்கலாம்..! அதில், பறக்கும் அதிபயங்கர மெகா சைஸ் 'RFG ஆயுதங்கள்' மூலம் கடல்கள் தீ மூட்டப்படலாம்..! After all we are all CITIZENS OF THIS WORLD..!
இப்படி நடந்தால்... மொத்தத்தில் இந்த அல்குர்ஆன் அத்தியாயத்தில் இறைவனால் கூறப்படும் கியாமத் நாள் நெருங்குவதற்கான பல்வேறு குறியீடுகளில் மற்றுமொரு அறிகுறியாகத்தான் இருக்கும் அது..!
இறைவன் ஒருவனே மிகவும் அறிந்தவன்..!
------------------------------------------------------------------------------------------
இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-4:82)
-------------------------------------------------------------------------------------------
நன்றி:- முஹம்மத் ஆஷிக்
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)