September 27, 2011

ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் !

(சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் நாவலராகவும் ஆலிமாகவும், சிராஜ் மாத இதழின் ஆசிரியராகவும் விளங்கிய கடையநல்லூர் மர்ஹூம் எஸ். யூ. அப்துல் ஹை சாஹிப் அவர்கள் தன்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியுடன் கிறிஸ்தவ மதம் குறித்து கேட்ட சில சிக்கலான கேள்விகள்)


நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக்கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில்என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட 
-இளமையும் அமைதியும் தவழும் களையான முகம். வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். "யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க  வேண்டும். " என்று எண்ணிக்கொண்டேன். 

September 15, 2011

மொபைலில் தமிழ் தளங்களை படிக்க / டைப் செய்ய


மொபைலில் தமிழ் தளங்களை படிக்க, நீங்கள் முதலில் உங்கள் மொபைல் மாடலை தேர்வு செய்து. Opera Mini Browser,ஐ பதிவிறக்கி மொபைலில் இன்ஸ்டால் செய்ய  வேண்டும். இதற்கான தரவிறக்க சுட்டி இதோ. இதை உங்கள் மொபைல் மூலமாகவும் செய்யலாம் அதற்கு நீங்கள் m.opera.com  என்று உங்கள் மொபைல் ப்ரோவ்செரில் தட்டச்சு செய்து தரவிறக்கம் செய்யலாம். 

பிறகு Opera Mini Browser'ஐ திறந்து அதனுடைய அட்ரெஸ் பாரில் Opera:config என டைப் செய்து OK அழுத்தவும்.  பிறகு ஒரு மெனு உங்களுக்குத் தெரியும். 

September 6, 2011

14 நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்படும் அல்குர்ஆன் பிரதிகள்


நிச்சயமாக நாம்தான் இவ்வேதமாகிய அல்குர்ஆனை இறக்கிவைத்தோம். மேலும் நாமே இதனைப் பாதுகாக்கின்றோம். 

(அல்குர்ஆன் - 15:09)


உஸ்மான் (ரழி) அவர்களால் தொகுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட அல்குர்ஆனின் மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 14 நூற்றாண்டுகளாக மூலப் பிரதி பாதுகாக்கப்பட்டுவரும் ஒரே வேதமாகத் திகழ்வது அல்குர்ஆன் மாத்திரம்தான். இப்பிரதி துருக்கி நாட்டின் இஸ்தாம்பூல் நகரில் உள்ள டொப்கொப்பி (Topkapi Museum) அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் காணப்படுவது 11ம் நூற்றாண்டில் வட ஆப்ரிக்காவிலிருந்து பெறப்பட்ட அல்குர்ஆன் பிரதியொன்றாகும். இப்பிரதி தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ல்குர்ஆனைப்பற்றிய சில தகவல்கள் :

September 4, 2011

கம்ப்யூட்டரில் அபாயம் தரும் பழக்கங்கள்


கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் கம்ப்யூட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் 

மைக்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் பாதுகாப்பைக் காட்டிலும் தங்கள் வசதிகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பதற்ற மில்லாத அமைதியை வழங்கினாலும், தங்கள் பழக்கங்களுக்கு அவை ஒரு தடையை ஏற்படுத்துவதாகவே கருதுகிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் தரும் சில மாற்றவேண்டிய பழக்கங்களை இங்கு காணலாம்.

1.அளவுக்கதிக தகவல்களைத் தருதல்: 

பல பயனாளிகள், குறிப்பாக இளைஞர்கள், தங்களைப் பற்றிய  தனிநபர் தகவல்கள், உணர்ச்சி பூர்வமான விஷயங்கள், வசிக்கும் இடம் போன்ற அந்தரங்க தகவல்களைத் தேவைக்கு அதிகமாகவே தருகின்றனர். இந்த

August 23, 2011

குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள்


'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே - பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே'

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். 

குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ....

வீட்டில் குழந்தைகள்:

எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

August 19, 2011

படித்ததில் ரசித்த ஜோக்ஸ்!!!

நண்பர்கள் எனக்கு ஈமெலில் அனுப்பிய சில நகைச்சுவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.. எழுதிய மகாராசன் வாழ்க..

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

August 10, 2011

கலந்துக்கொள்ளுங்கள்... தவளை போட்டியில்!!!

கீழ் உள்ள படத்தில்உங்களுக்கு இடது பக்கம் உள்ள மூன்று மஞ்சள் நிற தவளைகளையும், வலது புறத்திற்க்கும்.

வலது பக்கம் உள்ள மூன்று பழுப்பு நிற தவளைகளை, இடது புறத்திற்க்கும்

(   ã இந்த படத்தில் உள்ளது போல்)  மாற்றுங்கள்....

நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் 20௦ செகண்டுக்குள் இருந்தால், நீங்க பெரிய திறமசாளிதான். ட்ரை பண்ணுங்க!!!


August 4, 2011

சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அறிவிப்பு

பிளஸ் பொதுத்தேர்வில், 180க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவமாணவியருக்கு,நான்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்" எனதிருச்செங்கோடு சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சண்முகா இன்ஜினியரிங் கல்லூரியில்பி.இ.சிவில்மெக்கானிக்கல்,இ.சி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலைபுள்ளிபாளையத்தில், 90 ஏக்கர் பரப்பளவில் சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது.

August 3, 2011

இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசு

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஸ்ஜீத்-அல்-ஹராம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை   நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது.  இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். உலகிலேயே முதன்மையானதும் , மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாமியர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.



July 29, 2011

100 மருத்துவக் குறிப்புகள்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது. 

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

Pages 9« 456789
 
வருகைத்தந்தவர்கள்