August 19, 2011

படித்ததில் ரசித்த ஜோக்ஸ்!!!

நண்பர்கள் எனக்கு ஈமெலில் அனுப்பிய சில நகைச்சுவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.. எழுதிய மகாராசன் வாழ்க..

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

----------------------------------------------------------------------------------------------------------------------------
அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
----------------------------------------------------------------------------------------------------------------------------
காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two Side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
----------------------------------------------------------------------------------------------------------------------------
அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..

"கன்னத்தில் கொசுக்கடி"

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
----------------------------------------------------------------------------------------------------------------------------
புலிக்கு பின்னாடி போன‌ மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌ ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]
----------------------------------------------------------------------------------------------------------------------------
பெண்ணே...! உன்னை A''ஏய்'' என்று
அழைக்க மாட்டேன்...

மரியாதையாக என் இதயத்தின்
''B'' என்றுதான் அழைப்பேன்...
(B ன்னா தெரியும்ல இரு இரு என்று அர்த்தம்...)

அதற்காக என்னை ''C'' என்று சொன்னாலும்
நான் உன்னை ''D'' என்று சொல்ல மாட்டேன்...

''E'' என்று இழித்துக்கொண்டிருக்கும்
எனக்கு ''F'' என்ற ப்யூச்சரை (future) கொடு...

உன் ரவுடி அண்ணாவிடம் சொல்லி என்னை ''GH'' க்கு அனுப்பிவிடாதே...

இப்படிக்கு
எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா
மாவாட்ட சொல்லுவாங்க 

அப்ப ,

பஸ்ல காசில்லைன்னு சொன்னா 
பஸ் ஓட்ட சொல்லுவாங்களா 

இப்படிக்கு
டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர் சங்கம் 

----------------------------------------------------------------------------------------------------------------------------
கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் போனால்
டக் அவுட்

ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் 
வித் அவுட்

வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு 
ஆல் அவுட்நீங்க இதை படிச்சிட்டு லைக் / கமெண்ட்  கொடுக்காம போன
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

6 கருத்துரைகள்:

மு.ஜபருல்லாஹ் said...

ரமலானில் இது போன்ற பதிவுகள் அவசியமா?

Abu Nadeem said...

இதில் என்ன இருக்கிறது. ரமதானில் ஜோக் அடிப்பது தவறு என்று இஸ்லாத்தில் இருக்கிறதா என்ன?. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...இபாதத் செய்யவேண்டிய நேரத்தில் செய்துவிட்டு. மற்ற நேரத்தில் ஜாலியாக இருப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...

மு.ஜபருல்லாஹ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அபுநதீம்,

ரமலானில் குறிப்பிட்டநேரத்தில்தான் இபாதத் செய்யவேண்டிய நேரம் என்று வரையறை எதும் உள்ளதா?
முழு ரமலானிலும் பொழுதை வீணாக்காமல் பயனுள்ள இபாதத்களில் ஈடுபட வேண்டும்
ரமலானின் பயன் முழுவதும் நமக்கு கிடைக்க வேண்டாமா?

மு.ஜபருல்லாஹ் said...

நபி(ஸல்) கூறினார்கள்: தான் உண்மை கூறுவதாக இருந்தபோதிலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தமாஷானாலும் (காமெடி) பொய்யை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் நடுப்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அழகான குணமுடையவருக்க சுவனத்தின் மேல்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
(ஆபூதாவூது : அபூ உமாமா அல்பாஹிலி (ரலி) 630
(நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்)

ஆலிப் அலி... said...

ஸலாம் அன்பரே!

உங்கள் நகைச்சுவைப் பதிவு நன்றாக உள்ளது.

ஒருவிடயம் கூறிக்கொள்கின்றேன். ”இபாதத் என்பது தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் மாத்திரமல்ல. முழுவாழ்வுமே இபாதாவாக இருக்கவேண்டுமென்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.”

www.aliaalif.tk

Abu Nadeem said...

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஆலிப் அலி அவர்களே!!! தொடர்ந்து வாருங்கள், உங்கள் கருத்தையும் பகிருங்கள்...

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

வருகையாளர்கள்

Copyright 2010 - 2019 All Rights Reserved | உங்கள் ப்ளாக்

வருகைத்தந்தவர்கள்