August 4, 2011

சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அறிவிப்பு

பிளஸ் பொதுத்தேர்வில், 180க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவமாணவியருக்கு,நான்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்" எனதிருச்செங்கோடு சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சண்முகா இன்ஜினியரிங் கல்லூரியில்பி.இ.சிவில்மெக்கானிக்கல்,இ.சி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலைபுள்ளிபாளையத்தில், 90 ஏக்கர் பரப்பளவில் சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது.

ஏழை மாணவமாணவியர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில்இலவச கல்வி மற்றும் கட்டணச் சலுகைகள் அறிவித்துள்ளோம். நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று ஏழ்மை நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பொருளாதாரத்தில் பின் தங்கிஇன்ஜினியரிங் பட்டபடிப்பு படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்களுக்குநான்கு ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணம் முழுவதும் இலவசம்.

மேலும், 180க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவமாணவியருக்கும் நான்கு ஆண்டுகளுக்குகான முழு கல்விக்கட்டணமும் இலவசம். 150 மதிப்பெண்களுக்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்விக் கட்டணத்தில், 50 சதவீதம் இலவசம். 125 மதிப்பெண்களுக்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி கட்டணத்தில், 25 சதவீதம் இலவசம்.
ஆதரவற்றோர்ஏழைகள்விதவைகள்மாற்றுத்திறனாளிகள்தாய்தந்தையை இழந்த நன்கு படித்து அதிக மதிப்பெண் பெற்று இன்ஜினியரிங் படிப்பை தொடர முடியாத மாணவமாணவியருக்கு கல்விக் கட்டணம் முழுவதும் இலவசமாக அளிக்கப்படும். இன்ஜினியரிங் பட்ட படிப்புக்கான கல்வி கட்டண சலுகை வாய்ப்பை மாணவமாணவியரும்பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள, 04283-261199, 261299 என்ற தொலைபேசி எண்ணிலும், 88834 18108, 94860 69246, 81441 59676 ஆகிய மொபைல் ஃபோனிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:- பயனுள்ள தகவல்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்