Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

April 12, 2018

வேற ஸ்கூல்ல சேர்க்க டிசி தரமாட்டோம்னு பயமுறுத்துறாங்களா? கவலை வேண்டாம்

பல பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழ் நிலையில், சில பள்ளிக் கூடங்கள், வேறு பள்ளியில் சேரப் போகும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் T.C தர மறுக்கின்றன.

February 28, 2018

தேசிய அறிவியல் தினம் இன்று!

தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்தது. சர்.சி.வி.ராமன் அவர்கள் ஒளிச்சிதறல் விதி அதாவது ராமன் விளைவு (Raman Effect) என்கிற ஆராய்ச்சி முடிவை 1928ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று வெளியிட்டார். இதற்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1987ஆம் ஆண்டு அன்றைய பிரதமரின் ஒப்புதலோடு, நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர்  சர். சி. வி ராமன் தன்னுடைய ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது

February 18, 2018

இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா!!

வாங்க நண்பர்களே!!
தலைப்பை பார்த்து பயந்துடாதீங்க!!.
தெரியாததை தெரிந்துக்கொள்வதுதான் நம்ம பழக்கம். அதனால கீழே கொடுத்துள்ள கேள்விக்காண, பதிலை கிளிக் பண்ணுங்க. கவலைப்படாதீங்க இங்கு மார்க்கெல்லாம் கொடுக்க மாட்டோம். தெரியாததை தெரிஞ்சிக்குவோம். அவ்வளவு தான்



1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டாவதாக இறங்கிய (வஹீ) இறைவசனம் எது?


December 21, 2017

உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள்? - கணக்கு புதிர் - 4



உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள்  சொல்லவா ? கீழே உள்ளதை மட்டும் நீங்க  செய்யுங்க . 

தேவைப்பட்டால் கால்குலேட்டரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

உங்கள் சகோதரர்கள் எத்தனை பேர்?  (Addition)
                                          அந்த  எண்ணுடன்  2 ஐ  பெருக்கவும்  (Multiple by 2). 
                                          அத்துடன்  5 ஐ  சேர்க்கவும்  (add by 5)
                                          வரும் எண்ணுடன் 5 ஆல் பெருக்கவும்  (Multiple by 5 )

உங்கள் சகோதரிகள் எண்ணிக்கையை  இத்துடன் சேர்க்கவும்  (Addition)

June 9, 2016

ஈக்களை பற்றிய அறிவியல் பதிவு.

உங்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது! ( திருக்குர்ஆன் 22:73)
ஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய அறிவியல் பதிவை இன்று நாம் பார்ப்போம். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் : “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர் மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.

November 7, 2014

கணக்கு புதிர்கள் - 3

புதிர்#1). ஒரு தக்காளி  வியாபாரி தக்காளிபழங்களை கூறு கட்டி விற்க பார்க்கிறார் அவர் வைத்திருக்கும் தக்காளிபழங்களை,  இரண்டிரண்டாக கட்டினால் ஒரு தக்காளிபழமும், மூன்று மூன்றாக கட்டினால் இரண்டு தக்காளிபழங்களும், நான்கு நான்காக கட்டினால் மூன்று தக்காளிபழங்களும், ஐந்துஐந்தாக கட்டினால் நான்கு தக்காளிபழங்களும்,  
ஆறு ஆறாக கட்டினால் ஐந்து தக்காளிபழங்களும் மீறுகிறது. ஏழு ஏழாக கட்டினால் மட்டுமே சரியாக கட்ட முடிகிறது.

அப்படியானால் அவர் எவ்வளவு தக்காளிபழங்களை வைத்திருந்தார்.

October 29, 2014

உங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (சான்றொப்பம்) பெறுவது எப்படி


HRD (Human Resource Development) எளிதில்பெறும் வழிமுறைகள் :

வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.  

மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் ₹3000 முதல்₹4000 வரை கேட்பார்கள்.

February 17, 2014

ரெஸ்யூமே (Resume) – எப்படி இருக்க வேண்டும்?

வேலை கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எடுத்த எடுப்பிலே யே நிராகரிக்கப்பட  ஒரு காரணம், தன் னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் ரெஸ்யூமே (Resume) எந்த வகையிலும் கவராமல் போவதே. எந்த நிறுவனமாக இருந்தாலும் நாம் தரும் ரெஸ்யூமே சரி யாக இருந்தால் நிச்சயம் வேலை கிடைக் கும். அதனால்தான் வேலை தரும் மந்திர ச் சாவி என்று அதனை சொல்கிறார்கள்.
இந்த ரெஸ்யூமே எப்படி இருக்க வேண்டு ம்? இதை எப்படி தயாரிப்பது? என்று சொ ல்கிறார் ஐசால்வ் நிறுவனத்தின் ஹெச். ஆர். பிரிவி ன் உதவி மேலாளர் ந.பத்ம லட்சுமி.
‘நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்று உச்சரிக்கிறார்கள். இது தவறு. ‘ரெஸ்யூமே’ என்று  உச்சரிப்பதே சரி! தவிர, பயோடேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூமே ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர். பயோடேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவ லர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங் களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். கரிகுலம் விட்டே என்பது உயர் பதவிக்கு விண் ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூமே என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்க ளுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.

September 9, 2013

பொருளாதார வசதியில் குறைந்த நிலையில் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை

ஜெத்தாவில் இருந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக் குழுமம் பொருளாதார வசதியில் குறைந்த நிலையில் உள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்க இருக்கிறது.

இந்த கல்வி உதவித் தொகை மருத்துவம், பொறியியல், இதழியல், செவிலியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தொழிற்கல்வி, டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.

விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணையத்தளத்தில் விண்ணப்பத்தினை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

December 20, 2012

கணக்கு புதிர்கள் - 1

மூளைக்கு வேலையாக ஒரு சில கணக்குப்புதிர்களை இங்கே தந்துள்ளேன்.. நீங்கள் முயற்சித்துப் பார்த்து உங்கள் பதிலை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள். உங்கள் ஆர்வத்தை பொறுத்தே மேலும் புதிர்கள் இட முயற்ச்சிப்பேன் (இறைவன் நாடினால்)......... 

December 11, 2012

அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

February 12, 2012

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?


இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.
காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.
பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.

December 10, 2011

வடகரை பள்ளி மாணவிகள் (பயோ-டீசல்) கண்டுபிடிப்பு!!

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், வடகரை ஹாஜாசாரா அம்மாள் மெட்ரிக்  பள்ளி மாணவிகள் உருவாக்கிய பயோ-டீசல் செயல்முறை விளக்கம் நாகை   மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களை பாராட்டி ஆட்சியர் பேசியது:இந்தப் பள்ளியின் மாணவிகள் 2 பேர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் புங்கம் மரத்தின் விதையிலிருந்து பயோ-டீசலை உருவாக்கி, அதன் மூலம் காரை இயக்கி காட்டியுள்ளனர். இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய மாணவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இதுபோன்று இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகளையும் கண்டறிய மாணவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பயோ-டீசல் கண்டுபிடிப்பு தொடர்பாக மரபு சாரா எரிசக்தி

August 23, 2011

குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள்


'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே - பின்பு நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே'

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். 

குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ....

வீட்டில் குழந்தைகள்:

எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.

சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.

August 4, 2011

சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அறிவிப்பு

பிளஸ் பொதுத்தேர்வில், 180க்கு மேல் கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவமாணவியருக்கு,நான்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் முற்றிலும் இலவசம்" எனதிருச்செங்கோடு சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சண்முகா இன்ஜினியரிங் கல்லூரியில்பி.இ.சிவில்மெக்கானிக்கல்,இ.சி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலைபுள்ளிபாளையத்தில், 90 ஏக்கர் பரப்பளவில் சண்முகா இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது.

May 25, 2011

வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!

ஜெயா தன்னை தானே அழித்துக் கொள்ளும் ஒரு சக்தி.  புதிய சட்டசபைக் கட்டிட அலுவலகம் வேண்டாம் என்று சொல்லும் யாராவது பழைய தலைமை செயலகத்தின் உள்ளே அலுவலகத்திற்கு சென்று பார்த்து இருக்கிறீர்களா? போயிருந்தால் மீண்டும் உள்ளே செல்ல மாட்டீர்கள் அந்த அளவுக்கு மோசமான ஒரு கட்டிடம்...முழுக்க நாற்றம் அடிக்கும் ..அங்கு பணி புரிந்தவர்களை கேளுங்கள், அவர்கள் சொல்லுவார்கள். முதலில் அங்கு இட பற்றாக்குறை,  சரியான பாதுகாப்பு வசதிகள் செய்ய முடியாததால் பல ப்ரோக்கர்களும் கட்சி ஆட்களும் பல வழிகளில் உள்ளே நுழைந்து வெளியே வரலாம..ஏன் தீவிரவாதிகள் கூட எளிதில் தாக்கக்கூடிய அளவில் தான் உள்ளது .

ஜெயா ஒரு முறை கூட புதிய கட்டிடத்திற்குள் செல்லவில்லாமல்.சப்பை கட்டு காரணம் பல சொல்கிறார். இந்த புதிய கட்டிடம் கட்டியது மு க என்பதால் மனம் ஏற்க மறுக்கிறது .இது தான் ஆணவ வெறி மற்றும் அறிவீனம். ஜெயா தனக்கு தானே புதுபுது பிரச்சனைகளை உருவாக்கி கொள்பவர் என்பது பிரசித்தம். அரசு ஊழியர்கள் வசதியாக பணி புரிவார்களா அல்லது இவர் ஒருவருக்கு அந்த கட்டிடத்தை பிடிக்கவில்லை என்பதற்காக இப்படியும் அப்படியும் அலைந்து கொண்டு இருப்பார்களா? வரிகளை ஒழுங்காக கட்டும் இந்தியா பிரஜை என்றால் கட்சி சார்பற்று சிந்தியுங்கள்!. அந்த வரியினை வீணாக்குபவர்கள் கருணாநிதியாக இருந்தாலும் ஜெயாவாக இருந்தாலும் மன்னிக்க முடியாது. 

February 22, 2011

பெற்றோர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!! முக்கிய அறிவிப்பு


கடந்த சில வருடங்களாகவே, கல்வி கற்க கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் முஸ்லிம் பெண்கள் காதல் வயப்படுவதும் அல்லது குடும்பத்தை துறந்து காதலனுடன் ஓடிப்போவதும் அதிகரித்து வருகிறதாவே தெரிகிறது. அபரிதமான செல்போன் புழக்கமும் கட்டுப்பாடில்லாத போக்கும், இஸ்லாத்தின் வாழ்வியல் நெறி சரியாக போதிக்கப்படாததாலும் இந்நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
 சகோதரிகளே! ஆசைவார்தைக்கு மயங்கிவிடாதீர்கள்,

சகோதரிகளே!நீங்கள் எக்காரணத்தை கொண்டும் அந்நிய ஆணோடு பேசுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும், அவர்கள் ஆரம்பத்தில் மிகவும் அன்பு காட்டுவதை போல் நடிப்பார்கள்,சிரித்து பேசுவார்கள் , கண்ணே! மணியே!நீதான் என் உயிர், நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறுவார்கள்,நம்பி விடாதீர்கள்.ஏமாந்துவிடாதீர்கள்,மோசம் போய் விடாதீர்கள்.
சகோதரிகளே,பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருக்கவேண்டும்.. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் 

 
வருகைத்தந்தவர்கள்