HRD (Human Resource Development) எளிதில்பெறும் வழிமுறைகள் :
வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.
மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் ₹3000 முதல்₹4000 வரை கேட்பார்கள்.
Apply செய்ய வேண்டிய இடம்: பழைய தலைமச் செயலகம், பொது வழி (தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)
நேரம்: காலை 10 மணிக்கு மேல்
தேவையான Documents:-
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள் (இருபுறமும்)
2. வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல் (offer letter)
3. பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4. விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல் (இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)
வழிமுறைகள்:- அவர்கள் documents சரி பார்த்து Application Xerox இல் ஒரு நம்பர் எழுதி கொடுப்பார்கள்(அந்த நம்பர் தான் முக்கியம் தலைமை செயலகத்தில் பெற்ற அந்த Application form Xerox உடன் ₹500 க்கான டிடியை எடுத்து தலைமை செயலகத்தில் கொடுத்துவிடவும். |
இன்ஷா அல்லாஹ் 20 வேலை நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் பெற்று கொள்ளலாம்.
உங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தரவேண்டும்
எம் ஈ ஏ (Ministry of External Affairs) தேவையான சான்றிதழ்கள்:
2.பாஸ்போர்ட் நகல்
குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் எங்கும் எந்த இடைத் தரகர்களையும் நம்பாதீர். எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்கள்.
M.E.A அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். |
Ministry of External Affairs of the Government of India Joint Secretary (Consular), MEA CPV Division, Patiala House Annexe Tilak Marg, New Delhi. Tel.: +91 11 2338 8015 Fax.: +91 11 2338 8385 Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in ————– Ministry of External Affairs Branch Secretariat 2 Ballygunge Park Road Kolkata – 700019 Tel: 033-22879701 / 22802686 Fax: 033-22879703 ————– Ministry of External Affairs Branch Secretariat 7th Foor EVK Sampath Maligai 68 College Road Chennai – 600006 Tel: 044-28272200 / 28251323 Fax:044-28251034 ————— Ministry of External Affairs Branch Secretariat B Block Room #311-312 Hyderabad – 500022 Tel: 040-23456051 Fax:040-23451244 உங்களுக்கு எதாவது சந்தேகம் இருப்பின் மேலே உள்ள எண்களுக்கு தொடர்புகொண்டு விபரம் அறிந்து கொள்ளுங்கள். | |
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)