November 6, 2012

சூரிய ஒளி மின்சாரம் - சில தகவல்கள்


வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? . .

வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும்.

October 29, 2012

ரயிலு எங்க வருது - உங்க கைபேசி வழியே கண்டுபிடிக்கலாம்!!!


ஆமாங்க... ரயில பிடுச்சி  ஊருக்கு கிளம்பும் பயணிகளுக்கு ஒரு ஆறுதல் தரும் விதமாக கூகுள் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.



அரக்கபரக்க கிளம்பி ரயில் நிலையத்தில் கால்கடுக்க காத்திருக்கும் பயணிகள் இனிமேல்  நாம பயணிக்கும் ரயிலு  எந்த இடத்துக்கு வந்துகொண்டுள்ளது என இனையத்தின் உதவியுடன்  தமது கைபேசி வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என கூகுளு தெரிவித்துள்ளது

கல்கி அவதாரம் எப்போதோ முடிந்து விட்டது : இந்திய பிராமணர்


இறைவனின் கடைசி அவதாரம் என்று இந்துக்களால் விசுவாசிக்கப்படுகின்ற கல்கி அவதாரம் எப்போதோ இடம்பெற்று முடிந்து விட்டது, எனவே இனி அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இந்தியில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார் இந்தியாவில் வங்காள மாநிலத்தை சேர்ந்த சமஷ்கிருத பண்டிதரான பிராமணர் ஒருவர்.
இவரின் பெயர் பண்டித் வைத் ப்ரகாஷ. புத்தகத்தின் பெயரை தமிழில் இறை தூதின் வழிகாட்டி என்று சொல்லலாம். முஹமது நபிதான் வேதாகமங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற கல்கி அவதாரம் என்று இந்நூலில் எடுத்துக் கூறி உள்ளார்.

October 12, 2012

அந்த நூறு மனிதர்கள் (The 100 )


மைக்கேல் ஹர்ட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர் கடந்த 1978ல் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்களின் சாதனைகளை பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளோடும், அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்ட புத்தகமே அந்த நூறு மனிதர்கள்.

அவர் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட 1000 மனிதர்களில் சிறந்த 100 மனிதர்களை வரிசைப்படுத்தியுள்ளார். வரிசைப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் வரிசைப் படுத்தியதற்கான காரணங்களையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஏன் முதலிடம் தரப்பட்டுள்ளது, ஏன் இரண்டாம் இடம் தரப்பட்டுள்ளது என காரண காரியங்களுடன் வளக்கியுள்ளார்.

அவர் வரிசைப்படுத்திய மனிதர்களில் பல்வேறு மத தலைவர்களும், பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும், புரட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வெறு கொள்கைகளை அறிமுகப்படுத்திய தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அது தான் இந்த நூலின் முக்கியமான அம்சமாகும். 

October 11, 2012

முஹம்மத்- யார் இவர்?


இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை  இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது?  இக்கேள்விகளுக்கான  விடையே உங்கள் கையில் இருக்கும் இந்த வெளியீடு... 

சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...

August 7, 2012

துபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டியில் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ வைக்கும் த‌ஜிகிஸ்தான் சிறுவ‌ன்


துபாயில் நடந்து வரும் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டுள்ள 12 வயது தஜிகிஸ்தான் சிறுவன் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளான்.

துபாய் ச‌ர்வ‌தேச‌ திருக்குர்ஆன் விருது வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சியையொட்டி ச‌ர்வதேச‌ அள‌விலான‌ திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. இப்போட்டியில் ப‌ங்கேற்றுள்ள‌ த‌ஜிகிஸ்தானைச் சேர்ந்த‌ லுத்புல்லாஹ் கோலிகோவ் எனும் 12 வ‌ய‌து சிறுவ‌ன் த‌ன‌து திற‌மையினால் அனைவ‌ரையும் அதிச‌யிக்க‌ச் செய்து வ‌ருகிறான்.

August 2, 2012

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழிகள்


நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.  

உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக, முஸ்லிம்களால் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கப்படும் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழிகள் இங்கே பதிக்கப்படும்.  

முஸ்லிமல்லாதவர்கள் இந்த அற்புத மனிதரை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த பகுதி அமையுமென நம்புகின்றோம் (இறைவன் நாடினால்).

1. ஒரு தடவை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளில் ஒருவரைச் சுமந்தவாறு மக்ரிப் அல்லது இஷா தொழுகைக்கு வந்தார்கள். குழந்தையைக் கீழே இறக்கி விட்டு விட்டு தொழுகையைத் தொடங்கினார்கள். அவர்கள் சஜ்தாவுக்குச் சென்றதும் நீண்ட நேரம் அதே நிலையிலேயே இருந்திடவே – நான் சற்று என் தலையைத் தூக்கி எட்டிப் பார்த்தேன். பேரக்குழந்தை நபியவர்கள் முதுகில் அமர்ந்திருந்தது! நான் மீண்டும் சஜ்தாவுக்குச் சென்று விட்டேன்.

July 22, 2012

ரமழான் மாதம்


ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில்  எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்

அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின்  மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).      (அல் குர்ஆன் 2:185)

ரமலான் நோன்பின் சிறப்புக்கள் 

July 8, 2012

எங்கு கிளிக் செய்தாலும்...அங்கே ஒரு அற்புதம் !!

இந்த ஆச்சரியம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். கீழே உள்ள கருப்பு நிற பகுதியை Click  செய்து கொண்டே நகர்த்துங்கள்  ,  என்ன நடக்கிறது என்று பாருங்கள்! 

உங்களுக்கான அற்புதத்தை கண்டு மகிழுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் மறவாமல் கருத்திடுங்கள்.

Click your mouse anywhere (& everywhere) on this below black area & see what happens!  {click & drag your mouse over the black Area} I Hope you all will like it. If you like it don't forgot to leave your comments

June 15, 2012

உங்க தோட்டத்துல பாம்பு இருக்கான்னு கொஞ்சம் கவனிங்க!


பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். ஆபத்தான உயிரினமான பாம்புகளுக்கு புதர்செடிகள் மிகவும் பிடித்தமானவை. வீட்டுத் தோட்டங்களில் பாம்புகள் எளிதாக குடிபுகும். நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் குழந்தைக்களை கடித்துவிடும். இதனால் அவை உயிருக்கே ஆபத்தாகிவிடும். 

வீட்டு தோட்டத்தில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் குடிபுகாமல் இருக்க தோட்டக்கலைத்துறையினர் கூறும் அறிவுரைகளை படியுங்களேன்.

 
வருகைத்தந்தவர்கள்