April 12, 2011

தெரிந்துக்கொள்வோம் !!

ஜப்பானியக் கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே இவை விமானத்தைப் போல முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும்.

இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்ககின்றன.

சூழியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

Public House என்ற வார்த்தை தான் சுருங்கி Pub-ஆகிப் போனதாம். அங்கு டான்ஸ் ஃப்ளோரில் நடனமாட சத்தமாய் பாட்டு போடும் நண்பரை DJ அல்லது Deejay என்போம். இவ்வார்த்தை Disc Jockey என்பதின் சுருக்கமாம்.



காலை பொழுதை AM என்கின்றோம் இது Ante Meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலை பொழுதை PM என்கின்றோம் இது Post Meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.

"The quick brown fox jumps over the lazy dog." என்ற வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.

Abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரே குறுகிய வார்த்தை Feedback.

ஆங்கில தட்டச்சுபலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.

இறகு, முடியை தவிர மற்ற அனைத்தையும் மலைப்பாம்பு ஜீரணித்து விடும்.

நாய் மகிழ்ச்சியில் வாலை ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.


மக்காவில் உள்ள புனித பள்ளியான கபாவின் மேல் எந்த பறவையும் எச்சம் இடுவதில்லை.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.

உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.

கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.





0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்