MS Office இப்பொழுது தமிழில் வந்துள்ளது. எல்லாமே தமிழ் மயம். எல்லாவிதமான தொடர்புகளும் அமைப்புகளும் தமிழில் உள்ளன. நாம் ஆங்கிலத்தில் இதுவரை புரிந்துக்கொள்ளாத காரியங்கள் எல்லாம் எளிதாக காணமுடிகிறது.ஆங்கிலம் தெரியதவர்களும் கூட தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதுவரை ஆங்கிலத்தில் பார்த்த நமக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுக்கிறது. மேலும் இலக்கண பிழைகளை கூட இதில் காண்பிக்கிறது. இதிலிருந்து புதிய கணினி வார்த்தைகளை தெரிந்துகொள்ள முடிகிறது. மைக்ரோசாப் கம்பெனி இதை இலவசமாக கொடுக்கிறது. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்று அழைக்கபடும் இந்த மென்பொருளை நீங்கள் இங்கு தரவிறக்கி பயன்பெறுங்கள்.
தரவிறக்கி இதை Install செய்யுங்கள். Install செய்த பின் எப்படி அமைப்பது என்பதை பார்ப்போம்.
பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள்:Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு உங்கள் பயனர் இடைமுகத்தை மாற்றுவதற்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:
- Microsoft Office 2007 Language Settings -ஐ Start \ All Programs \ Microsoft Office \ Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.
- Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus anddialog boxes in: என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.
- Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxes என்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.
- Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு AddEnabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும். என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது
- Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்.
Office பயன்பாடுகளை அடுத்த முறை தொடங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மொழி அமைப்பு மாற்றங்கள் செயல்படும்.
- குறிப்பு: உதவியை Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு மாற்ற முடியாது. உதவியானது அசல் நிறுவலில் உள்ள மொழியிலேயே தொடர்ந்து இருக்கும்.
(மேலே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள் )
நன்றி:- Bro. கலீல் அஹமத்
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)