கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் கம்ப்யூட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட்
மைக்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் பாதுகாப்பைக் காட்டிலும் தங்கள் வசதிகளுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பதற்ற மில்லாத அமைதியை வழங்கினாலும், தங்கள் பழக்கங்களுக்கு அவை ஒரு தடையை ஏற்படுத்துவதாகவே கருதுகிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் தரும் சில மாற்றவேண்டிய பழக்கங்களை இங்கு காணலாம்.
1.அளவுக்கதிக தகவல்களைத் தருதல்:
பல பயனாளிகள், குறிப்பாக இளைஞர்கள், தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்கள், உணர்ச்சி பூர்வமான விஷயங்கள், வசிக்கும் இடம் போன்ற அந்தரங்க தகவல்களைத் தேவைக்கு அதிகமாகவே தருகின்றனர். இந்த