June 28, 2010

நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி

நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி.உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும்.இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில
பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில் சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தளத்தை பிரவுஸ் செய்யலாம்.பேஜ்நெஸ்ட் டாட் காம் (http://pagenest.com/) இது ஒரு இலவச ஆஃப் லைன் பிரவுசர். இதனைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த இணையதளத்தின் பக்கங்களை காப்பி செய்து ஹார்டு டிஸ்கில் ஏற்றிக் கொள்ளலாம்.பேஜ்நெஸ்டில் இணையதள முகவரி ஒன்றை அளியுங்கள் அது அந்த இணையதளம் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ உங்கள் ஹார்டு டிஸ்கில் பதிவிறக்கம் செய்து விடும். அப்படியே அந்த இணையதளத்தில் ஆன்லைனில் என்ன கண்டீர்களோ அது அப்படியே டெக்ஸ்ட், இமேஜஸ், எச்.டி.எம்.எல் அனைத்தையும் அப்படியே அச்சு அசலாகக் காட்டும்.பேஜ்நெஸ்ட் மூலம் 40 கோப்புகள் வரை டவுன்லோடு செய்ய முடியும். விரைவில் டவுன்லோடு செய்தும் முடித்து விடலாம். இதில் பல சிறப்பம்சங்களும் உள்ளன.சமீபத்திய டவுன்லோடுகள் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கிளிக் செய்யலாம். ஒரே கிளிக்கில் டவுன்லோடு செய்த பல்வேறு இணையதளங்களுக்கு செல்லும் வசதியும் உள்ளது. மேலும் இதற்காக நீங்கள் எந்த செட்டிங்கையும் மாற்ற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பேஜ்நெஸ்ட் பிரவுசர் மூலமும் நீங்கள் பிரவுஸ் செயலாம். மேலும் டவுன்லோடு செய்த இணையதளக் கோப்புகளை காப்பி செய்து நீங்கள் லேப்-டாப்பிலும் வைத்துக் கொள்ளலாம் எனவே நீங்கள் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அதனை வாசிக்கலாம். இதனை விண்டோஸ் விஸ்தா, எக்ஸ்பி-2000, எம்.இ மற்றும் 98 ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும்.இதே போல் http://www.httrack.com/ மற்றும் http://www.spadixbd.com/backstreet/ ஆகிய இணையதளங்களும் உள்ளன. இந்த இணையதளங்களை மட்டுமே ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட மணி நேரங்கள் பயன்படுத்தி நீங்கள் வழக்கமாக பார்க்கும் இணையதளங்களை டவுன் லோடு செய்தால் இன்டர்நெட் இணைப்பு பற்றிய பிரச்சினைகளும் இல்லை, செலவும் பெருமளவு குறையும


Thanks Mr.Sirajudeen.
KSA

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்