February 5, 2011

ஆர்குட் !, பேஸ்புக் ! - எச்சரிக்கை !!!



சமீப காலமாக சமுதாய இணையங்கள் என்று சொல்லப்படும் ஆர்குட், பேஸ்புக் போன்ற இணையங்களின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இவைகள் மூலம் எத்தனை எத்தனையோ நன்மைகள் இருக்கின்றன என்று கூறப்பட்டாலும் இதுபோன்ற இணையங்கள் பற்றி நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். 

இதுபோன்ற இணையங்கள் வாயிலாக தனி மனிதனின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற ஆதிக்க சக்திகள் நம்மை கண்கானிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன என்ற அதிர்ச்சியான தகவலையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் எப்படி சிந்திக்கறார்கள், என்ன என்ன மாதிரி கருத்துகளை 


பரிமாறிக்கொள்கிறார்கள், எந்தெந்த நாட்டு மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் போன்ற தகவல்கள் நமக்கே தெரியாமல் கண்கானிக்கப்படுவதை நாம் உணரவேண்டும்.இணையச்செய்தியையும் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்

Report says Tel Aviv uses site to get inside people's head

Israel uses Facebook to spy on Arabs & Muslims


For Facebook users updating their statuses or posting family pictures is for their select friends list but according to new report the information most people believe is private is actually being used by Israel to profile people and spy on them to obtain valuable.......

இதில் மிகமுக்கியமான தகவல், நாம்  சில விளைவுகளை அறிந்தோ அறியாமலோ தம் குடும்பத்தார்களின் புகைபடங்களை இணைத்துவிடுகின்றனர். திருமணத்தின் போது மணைவியுடன் இருக்கும் புகைப்படங்கள், தமது சகோதரிகள் புகைப்படங்கள், தமது உறவினர்களின் புகைப்படங்கள், குடும்பத்தின் மற்ற மற்ற பெண்களின் புகைப்படங்களை கட்டுபாடின்றி இணைத்துவிடுகின்றனர். நம் குடும்பத்தார்களை பாதுகாக்க வேண்டிய நாமே நம் குடும்பத்து பெண்களின் புகைப்படங்களை உலகில் யாரோ யாரோ ரசிக்கவும், அதனை தவறான வழியில் பயன்படுத்தவும் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

நாம்  இதுபோன்ற தவறான செயல்களை உணர்ந்து எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.


3 கருத்துரைகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பயனுள்ள தகவல்!
எச்சரிக்கையூட்டும் தகவல்!!

Issadeen Rilwan said...

இன்று எமது பாடசாலை மாணவர்கள் அதிகமாக இந்த தளங்களீல் நேரகாலங்களை ஓட்டுகிறார்க< இது ஒரு போதையாகி மாறிவருகிறது.

Ungal Blog said...

@NIZAMUDEEN & ISSADEEN

உங்கள் வருகைக்கும், கருத்தை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்