June 4, 2013

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!

உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.

அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆன் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தைப் பேசுவது பலதரப்பட்ட மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல அறிஞர்களை ஆராய்ச்சி பண்ண தூண்டுகிறது.

“இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்குர்ஆன் 47:24 “ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?’ 4:82 என்று அல்லாஹ் கேட்கிறான்.

April 14, 2013

முதுமையிலும் இளமை வேண்டுமா? அப்ப இத படிங்க.


   அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம். நிறைய பேர் இத்தகைய பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நிறைய ஆன்டி-ஏஜிங் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கு உணவுகளால் தீர்வு காண முடியும். சாதாரணமாகவே உண்ணும் உணவைப் பொறுத்து தான் உடல் நிலை இருக்கும் என்று சொல்வார்கள். எனவே நல்ல ஆரோக்கியமான, இளமைத் தோற்றத்தை நீட்டிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைய உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி, உடலே நன்கு பொலிவோடு அழகாக மின்னும். அதிலும் குறிப்பாக

February 23, 2013

2013 ஆண்டு புனித ஹஜ் பயணம் - தமிழ் நாடு ஹஜ் குழு



தமிழ்நாடு ஹஜ் குழுவுக்கு மார்ச் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு. 2013 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் கீழ் கானும் ஹஜ்  கமிட்டியின் இனையதளத்தில் சென்று விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துகொள்ளவும்.



விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 20/3/2013


தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஹஜ் 2013-ல் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, பல்வேறு 
நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

February 20, 2013

மின் கட்ட‍ண விவரம் தெரியுமா உங்களுக்கு


வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்ட‍ண மீட்ட‍ரில் உள்ள‍ அளவுகளை குறித்துக்கொண்டும், அந்த அளவுகளுக் கான மின் கட்ட‍ணம் எவ்வ‍ளவு என்பதனை அவரிடம் உள்ள‍ ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு, நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட‍ வேண்டிய தொகையினை குறித்துக்கொடுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகையை நாமும் அப்ப‍டியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு வருகிறோமே! அதைப்பற்றிய அடிப்படை அறிவு நமக்கு இருந்ததுண்டா ? ஒரு இணையத்தில் நான் கண்ட பதிவு மின் அட்டையை பற்றிய சில குறிப்புக் களை அனைவருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார். நீங்கள் படித்து பயனுறுங்கள்.

January 8, 2013

புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா

அல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் டாக்டர் பாக்கவி அவர்கள்.

முதல் கிஸ்வா

1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.

2. பெருமானார் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.

January 4, 2013

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?


இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.

December 20, 2012

கணக்கு புதிர்கள் - 1

மூளைக்கு வேலையாக ஒரு சில கணக்குப்புதிர்களை இங்கே தந்துள்ளேன்.. நீங்கள் முயற்சித்துப் பார்த்து உங்கள் பதிலை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள். உங்கள் ஆர்வத்தை பொறுத்தே மேலும் புதிர்கள் இட முயற்ச்சிப்பேன் (இறைவன் நாடினால்)......... 

December 11, 2012

அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

December 8, 2012

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்.


நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.  மேலும் பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம்.

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் முதல் வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு  தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

November 16, 2012

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்..


கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்.

‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.

மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும் 

‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (திரு குரான் 2:228) 

என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

 
வருகைத்தந்தவர்கள்