January 4, 2013

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு?


இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.

முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும்.

அதைத் தெரிந்துகொண்ட சீனர் கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பியைத் திறந்து பார்க்கும்போது, முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட்டிருக்கும்.

ஜப்பானியர்கள், சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப்பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து, நன்கு விளைந்த முத்தாக வெளியில் எடுக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்பனையாகிறது.

இனி, உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன என்று பார்க்கலாம். கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேரடியாக உணவுப்பொருட்களை உருவாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப்பவை), சிலநேரங்களில் சிப்பியின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென்று விடுகின்றன. அப்போது சிப்பியின் உட்பாகத்தில் ஓர் உறுத்தல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழியும். அவ்வாறு பொழியும்போது அந்தப் புல்லுருவி மடிந்துவிடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளில் படிந்துவிட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம்முறையிலேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகிவிடுகிறது. ஆனால் முந்தைய முறையில் உற்பத்தியாகும் முத்துதான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

6 கருத்துரைகள்:

Unknown said... 1

நான் SSLC படிக்கும் போதே SSLC பொது தேர்வில் கேட்ட இந்த கேள்விக்கு பதில் என் வகுப்பில் நான் மட்டும் சரியாக எழுதி இருந்தேன் !

Ungal Blog said... 2

அப்ப உங்க கிளாஸ்ல நீங்க மட்டும் தான் நல்லா படிக்குற புள்ளன்னு சொல்லுங்க!!

அடுத்தமுறை கருத்திடும்போது உங்கள் பெயருடன் பதிவிடுங்கள் மாமா.

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

mohamedali jinnah said... 3

முத்தான முத்தல்லவோ ! முத்தான கட்டுரை . நவரத்தினங்களில் மிகவும் பிடித்தது . பகட்டு காட்டாத பெருமையை தன்னிடம் அடக்கிக் கொண்டது
கருத்திடும்போது பெயரும் பதிவாகிவிட்டது

Ungal Blog said... 4

மிக்க நன்றி மாமா,உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும்.

Saravanan said... 5

மிகவும் பயனுள்ள தகவல்! நன்றி நண்பரே.. உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது..

Ungal Blog said... 6

@saravanan, மிக்க நன்றி நண்பரே. உங்கள் கருத்துரைக்கும், வருகைக்கும். அடிக்கடி வாருங்கள் உங்கள் கருத்தினை பகிருங்கள்....

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Pages 9123456 »

Comments

 
வருகைத்தந்தவர்கள்