வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்டண மீட்டரில் உள்ள அளவுகளை குறித்துக்கொண்டும், அந்த அளவுகளுக் கான மின் கட்டணம் எவ்வளவு என்பதனை அவரிடம் உள்ள ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு, நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட வேண்டிய தொகையினை குறித்துக்கொடுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகையை நாமும் அப்படியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு வருகிறோமே! அதைப்பற்றிய அடிப்படை அறிவு நமக்கு இருந்ததுண்டா ? ஒரு இணையத்தில் நான் கண்ட பதிவு மின் அட்டையை பற்றிய சில குறிப்புக் களை அனைவருக்கும் புரியும் வகையில் கொடுத்துள்ளார். நீங்கள் படித்து பயனுறுங்கள்.
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
.
1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
.
நிலைக்கட்டணம் இல்லை.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டு க்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)
.
இரண்டாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உப யோகி த்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆக மொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
.
மூன்றாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகி க்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)
.
நான்காம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
.
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+ கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆக மொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்த வேண்டும்)
.
கடைகளுக்கானது:-
.
1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நன்றி:- ஷேக் அலாவுதீன் மாமா - முகநூல் பதிவு
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)