November 7, 2014

கணக்கு புதிர்கள் - 3

புதிர்#1). ஒரு தக்காளி  வியாபாரி தக்காளிபழங்களை கூறு கட்டி விற்க பார்க்கிறார் அவர் வைத்திருக்கும் தக்காளிபழங்களை,  இரண்டிரண்டாக கட்டினால் ஒரு தக்காளிபழமும், மூன்று மூன்றாக கட்டினால் இரண்டு தக்காளிபழங்களும், நான்கு நான்காக கட்டினால் மூன்று தக்காளிபழங்களும், ஐந்துஐந்தாக கட்டினால் நான்கு தக்காளிபழங்களும்,  
ஆறு ஆறாக கட்டினால் ஐந்து தக்காளிபழங்களும் மீறுகிறது. ஏழு ஏழாக கட்டினால் மட்டுமே சரியாக கட்ட முடிகிறது.

அப்படியானால் அவர் எவ்வளவு தக்காளிபழங்களை வைத்திருந்தார்.

------------------------------------------------------------------------------
புதிர்#2).   கீழும் மேலுமாக இரு வரிசைகளிலும் சிறிது பறவைகள் பறக்கின்றன. மேல் வரிசையில் இருந்து கீழ் வரிசைக்கு ஒரு பறவை வந்தால் இரு வரிசைகளிலும் உள்ள பறவைகளும் ஒன்றுக்கு ஒன்று சமமாகவும். கீழ் வரிசையில் இருந்து ஒரு பறவை மேலே சென்றால். கீழ் இருக்கும் பறவையின் தொகையை விட இரண்டு மடங்காகிறது. அவ்வறெனில்

கிழ் வரிசையில் உள்ள பறவையின் எண்ணிக்கை எவ்வளவு?
மேல் வரிசையில் உள்ள பறவையின் எண்ணிக்கை எவ்வளவு?
--------------------------------------------------------------------------------

புதிர்#3). என்னிடத்தில்  கொஞ்சப் திராட்சை பழங்கள் இருக்கின்றன. அதை  சாப்பிடலாம் என்று அமர்ந்த போது, என் நண்பர் வந்து விட்டார் (அது நீங்க தாங்க). தனக்கும் அப்பழங்களை உண்ணத் தரும்படி என்னிடம் கேட்டார்.

என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கின்றது என்று கூறினால், உனக்கும் நான் சாப்பிட பழங்களைத்தருவேன். ஆனால் திராட்சை பழங்களை எண்ணவிடமாட்டேன். அதற்கு பதில் ஒரு புதிர் தருகின்றேன் என்றேன் , சரி என்றான்  என் புத்திசாலி நண்பன்.

என்னிடம் இருக்கும் பழங்களை இரண்டு சமமாக பிரித்தால், ஒரு பழம் மிகுதியாக வரும். அப்படியே 3, 4, 5, 6 பகுதிகளாக பிரித்தாலும்  ஒரு பழம் மிகுதியாக வரும். ஆனால் 7 பகுதிகளாக பிரித்தால் மட்டுமே மிகுதியில்லாமல் வருகிறது. அப்படி என்றால் என்னிடம் எத்தனை பழங்கள் இருக்கின்றன. 

மேல்  கண்ட புதிர்களுக்காண உங்கள் விடைகளை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள். 

 இதையும் பார்க்கலாமே :-


5 கருத்துரைகள்:

Unknown said...

Question No.01
Answer is 119

Unknown said...

Question no.01
Answer :- 119

Ungal Blog said...

சரியான விடை, மற்ற புதிர்களுக்கும் விடைகளை யோசிக்கலாமே !!

Unknown said...

Question 3.
49 பழங்கள்

Ungal Blog said...

//49 பழங்கள்// தவறான விடை.
பெயருடன் பதிவிடுங்கள் சகோ.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்