December 20, 2012

கணக்கு புதிர்கள் - 1

மூளைக்கு வேலையாக ஒரு சில கணக்குப்புதிர்களை இங்கே தந்துள்ளேன்.. நீங்கள் முயற்சித்துப் பார்த்து உங்கள் பதிலை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள். உங்கள் ஆர்வத்தை பொறுத்தே மேலும் புதிர்கள் இட முயற்ச்சிப்பேன் (இறைவன் நாடினால்)......... 


புதிர்- 1


ஒரே காம்பவுண்டில் உள்ள மூன்று வீட்டிற்கு ஆப்பிள் வியாபாரி, தன்னிடமுள்ள ஆப்பிள்களில் பாதியையும் + அரை ஆப்பிளையும் முதல் வீட்டிற்குக் கொடுக்கிறார். 
மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை இரண்டாம் வீட்டிற்குக் கொடுக்கிறார்.


மீதி உள்ளதில் பாதி + அரை ஆப்பிளை மூன்றாம் வீட்டிற்குக் கொடுக்கிறார். 
இப்போது வியாபாரியின் கூடை காலியகிவிட்டது! அப்படியானால் வியாபாரி கொண்டுவந்த ஆப்பிள்களின் எத்தனை முழு ஆப்பிள்களும், எத்தனை அரை ஆப்பிள்களும் இருந்தன?

விளக்கம்:- 


பாதி என்றால்:- பத்தில் பாதி ஐந்து...., நான்கில் பாதி இரண்டு...... என்று பொருள்
அரை என்பது:- ஒரு ஆப்பிளை வேட்டினால் வரும் பாதி துண்டு = அரை! 




=================================================



புதிர்- 2




உங்கள் சட்டையை விட உங்கள் பேன்ட்டின் விலை100 ரூபாய் அதிகம், இரண்டும் சேர்த்து 110 ரூபாய் எனில், தனித் தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்க!!


===================================================
புதிர்- 3

தீப்பெட்டி ஒன்றில் 48 குச்சிகள் உள்ளன. அதை 3 சமமற்ற குவியலாக கொட்டப்பட்டன.

  • 2 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 1 வது குவியலிலிருந்து எடுத்து 2 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
  • 3 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 2 வது குவியலிலிருந்து எடுத்து 3 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.
  • பின்னர் 1 வது குவியலில் எவ்வளவு குச்சிகள் உள்ளதோ, அதே அளவு குச்சிகள் 3 வது குவியலிலிருந்து எடுத்து 1 வது குவியலுடன் சேர்க்கப்படுகின்றது.


இப்படி சேர்க்கப்பட்டவுடன் 3 குவியல்களிலும்  குச்சிகள் சமமான எண்ணிக்கையை காட்டின.

அப்படியானால் ஆரம்பத்தில் ஒவ்வொரு (சமமற்ற) குவியல்களில் இருந்த குச்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு? 


===================================================


புதிர்- 4



இதுதான் கேள்வி..
1 = 3 
3 = 5

2 = 3

4 = 4 

5 = 4

னில் 


6 = ?
குறிப்பு: வேறு விதமாகவும் சிந்திக்கவும். வெறும் இலக்கத்தை மட்டும் கணக்கிடுவதால் மட்டும் விடை கிடைக்காது.






மேலும் கணக்கு புதிர்களை காண இங்கே சொடுக்கவும்
 

26 கருத்துரைகள்:

Kamil said...

என்ன....மூளைக்கு வேலையா?....இதுலாம்....மூளை உள்ளவங்களுக்குதான்....எனக்கு இல்ல....

fathi said...

Answers:-

1, 5 Mangoes
2, shirts 10 Rs. Pant 110 Rs.
3. i am trying.....
4. after finished 3rd riddles, i will come to 4th Riddle....ha...ha..ha.. (just joking... i don't know)

is my first 2 answers are right?

Unknown said...

6=3

Ungal Blog said...

@Kamil, சொல்வதற்கு ஒன்றும் இல்லை நண்பரே! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

Ungal Blog said...

@fathi, உங்கள் முதல் விடை மட்டுமே சரியானது, முயற்சி செய்துகொண்டுள்ளமைக்கு மிக்க நன்றி

Ungal Blog said...

@V Karthikeyan, உங்கள் (புதிர்- 4 க்கான) விடை சரியானதே, மற்ற புதிகளையும் முயற்ச்சிக்கலாமே. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

M.Arunachalam said...

புதிர் விடைகள்.
1)3ஆப்பிள்கள் 3அரை ஆப்பிள்கள்.
2)$5சட்டை,$105பேண்ட்,
3) 34,10,4
4)6=3

Ungal Blog said...

@Arunachalam, உங்களின் விடை 2, 3 & 4 ம் சரியே !!!

புதிர் 3 ற்கு முதற்குவியலில் 22 குச்சிகளும்,
இரண்டாம் குவியலில் 14 குச்சிகளும்,
மூன்றாம் குவியலில் 12 குச்சிகளும். இருத்தாலும் விடை சரியாக இருக்கும். உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் :)

Unknown said...

புதிர் 1 க்கு 8 முழு ஆப்பிள் ஒரு அரை ஆப்பிள்
புதிர் 2 க்கு சட்டை 5 ருபாய் பேண்ட் 105 ருபாய்

Ungal Blog said...

@Gokula Krishnan புதிர் 1 க்காண விடை தவறு நண்பரே!...உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள். முயற்ச்சி செய்யுங்கள் (புதிர் 2க்கு விடை கிடைத்தது போல) விடை கிடைக்கும்... :)

PRATHAP said...

புதிர் 1 க்காண விடை =7முழு ஆப்பிள் மட்டுமே

PRATHAP said...

அருணாசலம் 3ஆம் புதிருக்கான விடை தவறு. 22,14,12 மட்டுமே சரியான விடை

PRATHAP said...

புதிர் 4 க்கு விடை எப்படி 6=3 , விவரமாக சொல்லவும்.

Unknown said...

sorry

Unknown said...

sorry yenakku theryala

Ungal Blog said...

@Prathap //புதிர் 1 க்காண விடை =7முழு ஆப்பிள் மட்டுமே// இந்த விடை தவறு.

//புதிர் 4 க்கு விடை எப்படி 6=3 , விவரமாக சொல்லவும்.// அந்த எண்களின் ஆங்கில எழுத்துகளை கூட்டி பாருங்கள் விடை வரும். (Ex. One=3, two=3, six=3)

புதிர் 1 க்காண முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்..

Ungal Blog said...

@arunkumar எல்லா புதிர்களுக்கும் விடை சொல்லியாச்சு...புதிர் 1 மட்டுமே பாக்கி...ட்ரை பண்ணுங்க...

Anonymous said...

5 mulu apple

தமிழ்த்தோட்டம் said...

5 முழு ஆப்பிள் மட்டுமே

Ungal Blog said...

@தமிழ்த்தோட்டம், கிட்ட வந்துடீங்க...இன்னும் சரியாக சொல்லலாமே! , இந்த புதிரை உங்கள் வளையத்தில் இணைத்துள்ளீர்கள், ஆனால் என் இணைய இணைப்பை கொடுக்கவில்லையே.

Unknown said...

1) 7 apple
2) Rs105 - Rs5
3) 24, 14, 12
4) 6=3

Ungal Blog said...

@Kirubhaharan எல்லா புதிர்களுக்கும் விடை ஏற்கனவே சொல்லியாச்சு...புதிர் 1 மட்டுமே பாக்கி... இருந்தும் நீங்கள் சொல்லிய 7 அப்பிள்கள் என்பது தவறானது. முயற்சிசெய்யுங்கள் நண்பரே :)

Unknown said...

1) 5 apples
3) 22,14,12

Unknown said...

1) 4+two 1/2 apples
3) 22,14,8

Ungal Blog said...

@KAMAL PRASATH.P Kamal உங்கள் 24 வது கருத்துரையில் உள்ள முதல் புதிருக்காண விடை முற்றிலும் சரியே....வாழ்த்துக்கள் :)

தமிழ் மொழி said...

அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_5.html?m=1

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்