நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்., நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்., மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.
இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில், கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..
இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன. நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர்.
இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.
அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை "எள் எண்ணெய்" என்று சொல்வதற்கு பதிலாக " நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று அழைக்கிறர்கள்.
ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான உண்மை.
சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..
மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி, அதில் ரசாயனம் சேர்த்து அதில் உள்ள கலரை எடுத்து விடுகிறார்கள், பின்பு Deodorization செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள்.
திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள்.
உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காமல் உருக்குலைந்து உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும் ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.
செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது ரசாயன கலவையாக மாறாது. அதன் தாதுப் பொருள்கள் அப்படியே சிதையாமல் நமக்கு கிடைக்கும்.
எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால் இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு இருக்கிறார்கள்.
ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு., உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான பொருட்கள் நீக்கப்பட்ட ஒரு திரவத்தை ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??
நாமும் யோசிக்கும் சக்தியை ஏன் இழந்து விட்டோம்.?
நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம் சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பது தான்
காரணம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம்.
கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்க்கான காரணங்களில் முக்கியமான இடத்தை பிடித்து இருப்படி ரீஃபைண்ட் ஆயில். " விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது அதற்க்கு ஏற்றார்போல் நாமும் மாற வேண்டும்."
என்று சிலர் சொல்லக்கூடும்.
ஆனால் விஞ்ஞானம் தொழில்துறையில் இருக்கலாம்.,நம்முடைய உடல் ஆரோக்கியத்தோடு அந்த விஞ்ஞானம் விளையாடக்கூடாது..
4 கருத்துரைகள்:
ரீஃபைண்ட் எண்ணையின் பின்னணி பயங்கரமாயிருக்கே!
Good News ! All must read. Please avoid refind oil !
@NIZAMUDEEN அண்ணா!!
//ரீஃபைண்ட் எண்ணையின் பின்னணி பயங்கரமாயிருக்கே! //
என்ன செய்வது ஆயில் என்றாலே அலர்ஜியாத்தான் இருக்கு இப்போ!!!
Keep in touch with my blog...thanks for your comment
@Shaik Alavudeen மாமா!!!
உங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி!
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)