December 23, 2010

இந்து மதம் எங்கே போகிறது?

காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பிராமிணர் ) என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் நமக்கு விளக்குகிறார்.

மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார்

தாத்தாச்சாரியர் - வேதங்களை எல்லாம் கற்ற மனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது. பிராமணராக இருந்தாலும் அவர் எழுத்துக்கள் பகுத்தறிவு சிந்தனை கொண்டதாக உள்ளது. 


நக்கீரன் இதழில் இந்து மதம் எங்கே போகிறது? என்ற தொடர் கட்டுரையைத் தீட்டினார்.அது அப்படியே ‘விடுதலை’ யிலும் வெளியிடப்பட்டது. 

பின்னர் நூல் வடிவிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அதன் தொடர்ச்சியாக நக்கீரன் இணைய இதழில் சடங்குகளின் கதை என்ற தொடரை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார். 

நக்கீரன்’ இதழில் தொடந்து வெளி வந்த இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. இத்தொடரை நக்கீரன் நூலாக வெளியிட்டுள்ளது. 

இந்நூலில் இந்து மதச்சடங்குகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.
சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்த இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது.... 

எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது. 

நூல்: சடங்குகளின் கதை (இந்துமதம் எங்கே போகிறது? - பாகம் 2) 

ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் . 

வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75



இந்நூலை உள்ள கட்டுரை தொகுப்புகளை இங்கே சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள்

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்