பல பள்ளிக் கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
பெற்றோர்கள் தாங்கள் விரும்பும் பள்ளிக் கூடங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழ் நிலையில், சில பள்ளிக் கூடங்கள், வேறு பள்ளியில் சேரப் போகும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் T.C தர மறுக்கின்றன.
இல்லையெனில் பெற்றோர்களை டி சி க்காக வேண்டி, பல முறை அலைய விட்டு நோகடிக்கின்றனர். இதனால் மனம் ஒப்பவில்லை என்றாலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
பள்ளிக் கூடங்களின் இந்த நெருக்கடியால் பலருக்கு நல்ல கல்வி கிடைக்காமல் போய் விடுகின்றது.
இனி இந்தக் கவலை வேண்டாம்.
தமிழக அரசு கல்வித் தகவல் மேலாண்மை முறைமை. Educational Management Information System என்ற ஒரு இணைய த்தின் மூலம் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்துள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் Unique EMIS எண் வழங்குகிறது.
ஒரு மாணவர் டி சி இல்லாமல் , இந்த EMIS எண் மூலமாக வேறு பள்ளியில் சேரலாம்.
அவர்கள் சேரும் அந்த புதிய பள்ளியிலிருந்து இந்த மாணவர் ஏற்கனவே பயின்ற அரசு அல்லது தனியார் பள்ளிக்கு இந்த இணைய தளம் வாயிலாக Online REQUEST வேண்டுகோள் அனுப்பப்பட்டு டி சி வழங்க ஏற்பாடு செயப்படும். இதனை அரசு அதிகாரிகள் கண்காணித்து வருவார்கள்.
இனி என்ன கவலை ? டி சி இல்லாட்டியும் பரவாயில்ல.. நீங்கள் விரும்பும் பள்ளியில் உங்கள் பிள்ளைகளை சேருங்க. டி சி தானா.. வரும்.
சரிங்க... டி சி வாங்கவே முடியலைங்க .. இப்போ என்ன செய்றதுன்னு கேக்குறீங்களா?
உங்க குழந்தைக்கு என்ன வயசாகுதோ அந்த வயசின் அடிப்படையில் நீங்க டி சி இல்லாமலே RTE ACT மூலமாக 8 ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிக் கூடத்துல நேரடியாக சேர்க்கலாம்.
இனி என்ன கவலை ? நீங்க விரும்பும் பள்ளிக் கூடத்துல உங்க பிள்ளையை படிக்க வைங்க..
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)