December 10, 2011

வடகரை பள்ளி மாணவிகள் (பயோ-டீசல்) கண்டுபிடிப்பு!!

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், வடகரை ஹாஜாசாரா அம்மாள் மெட்ரிக்  பள்ளி மாணவிகள் உருவாக்கிய பயோ-டீசல் செயல்முறை விளக்கம் நாகை   மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களை பாராட்டி ஆட்சியர் பேசியது:இந்தப் பள்ளியின் மாணவிகள் 2 பேர், ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் புங்கம் மரத்தின் விதையிலிருந்து பயோ-டீசலை உருவாக்கி, அதன் மூலம் காரை இயக்கி காட்டியுள்ளனர். இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய மாணவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இதுபோன்று இன்னும் பல்வேறு கண்டுபிடிப்புகளையும் கண்டறிய மாணவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பயோ-டீசல் கண்டுபிடிப்பு தொடர்பாக மரபு சாரா எரிசக்தி


துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு பின்னர், இந்த பயோ-டீசல் அங்கீகரிக்கப்பட்டால், மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.புங்கம் மரவிதையில் பயோ- டீசலை உருவாக்கி, அதன் மூலம் காரை இயக்கி காட்டி செயல்முறை விளக்கம் அளித்த மாணவிகள் எப். லியானாபாஹத்,  எச். அராபத் நிஷா ஆகியோர் தெரிவித்தது:

இந்தியாவில் 90 வகையான எண்ணெய் தரும் மரங்கள் உள்ளன. இந்த வகை மரங்களில் ஒன்றுதான் பொங்கமியா பின்னாட்டோ என்ற அறிவியல் பெயரைக் கொண்ட புங்கைமரம். இந்த மரங்கள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளன.
இந்த மரத்திலிருந்து சுமார் 100 கிலோ விதை கிடைக்கும். ஒரு விதையிலிருந்து 30-35  சத பயோ-டீசல் எண்ணெய் பெறலாம். பயோ- டீசல் மோட்டார் வாகனங்களின் என்ஜினை சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதைப் பயன்படுத்துவதால் மாசுக்களை தவிர்க்கலாம். நோய் பாதிப்பும் இருக்காது என்றனர்.
நிகழ்ச்சியில் பயோ- டீசலை உருவாக்கிய மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   இந்த மாணவிகளுக்கு ரூ. 2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மெட்ரிக் பள்ளியின் ஆய்வாளர் திருவளர்செல்வி, மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர்  ஜி.பி. சக்திவேல், தரங்கம்பாடி வட்டாட்சியர்  சூரியமூர்த்தி,செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணசாமி,  ரத்தினமாலா, பள்ளி  தாளாளர் ஜியாவூதீன், முதல்வர் குணசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் எம். சம்சுதீன், எழுத்தாளர் ஷேக்அலாவுதீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், வடகரை ஜமாத்தார்கள் பங்கேற்றனர்.

2 கருத்துரைகள்:

MRMN said...

மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

Alaudeen said...

Masha allah happy to hear news like this ..heartly wishes to the girls...!!!!!! and may allah bless them well :)

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்