May 11, 2011

No.1 - சேல்ஸ்மேன்

இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு ஒருவர் வேலை தேடிச் செல்கிறார். 


மேனேஜர்: சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?


சேல்ஸ்மேன்: நான் இந்தியாவில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்.


மேனேஜர்: உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்


முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
மேனேஜர்: இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?


சேல்ஸ்மேன்: ஒருவரிடம் மட்டும்…


மேனேஜர்: என்ன ஒருத்தர் மட்டுமா? உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும்.சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?


சேல்ஸ்மேன்: “$101237.64”


மேனேஜர்: ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?


சேல்ஸ்மேன்: முதலில் அவரிடம் சிறிய தூண்டில், கொஞ்சம் பெரியது, அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷிங் ராட், ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன். பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார்.  நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்.


மேனேஜர்: என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?


சேல்ஸ்மேன்: அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்.


(இவருக்கெல்லாம் டிரிபிள் ப்ரமோஷன் ல கொடுக்கணும்)
நன்றி : மின்னஞ்சல்கள்


2 கருத்துரைகள்:

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

நம்பர் 1 சேல்ஸ்மேன் ஆவது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி!

ஹிஹிஹி...

Ungal Blog said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்..). கருத்திட்டதற்க்கும், தெரிந்துகொண்டமைக்கும், சிரித்ததற்க்கும் மிக்க நன்றி பாஸித். இப்பொழுது எங்கு இருக்கிறீகள்...

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்