அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.
குரான் கூறுவதை கேளுங்கள்:-
என்னை ஒருக்காலும் பார்க்க இயலாது (7:143)
பார்வைகள் அவனை அடைய முடியாது.ஆனால் அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான்.அவன் நுட்பமானவன்,தெளிவான ஞான முடையவன்.(6:103)
இதேபோல் பகவத் கீதை
அவன் மகாத்மா,கானுதர்கரியன் (7:19)
சென்று விட்டனவும்,நிகழ்வனவும்,இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன்,ஆனால் என்னை எவனும் அறியான். (7:26)
குரான் கூறுகிறது; இறைவன் அவன் ஒருவனே,அவன் எத்தேவையும் அற்றவன்,அவன் (எவரையும்)பெறவுமில்லை,(எவராலும்)பெறப்படவுமில்லை,மேலும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை.(அத்தியாயம் 112)
பகவத் கீதை: அவன் ஆதிதேவன்,பிரவாதவன் (10:12)
திருக்குரான் :அவனை அன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கின்றீர்களோ,அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும்,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.(7:197)
பகவத் கீதை :எவர் ஒருவர் பரம் பொருளாக தாமாக உண்டாக்கி வணக்குகிராரோ,அவர் பொய்யையே வணக்குகிறார்.(7:20)
ஆக மேற்கொண்ட குரானின் கருத்துக்களை, பகவத் கீதை ஒப்புக்கொள்வதோடு ஏக இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும் என்றும் தாமாக உண்டாக்கி (கல்,மண்,மரம்,பசு,சிலைநெருப்பு,இன்னும் பிற)வணங்குதல் கூடாது என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறது.
பகவத் கீதை போன்று மற்ற இந்து மத உபநிஷத்துக்கள்,கூறுவதை கேளுங்கள்:
1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.
”ஏகம் எவதித்யம்”
”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே”
உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது
குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே”
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை.
குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)
4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
இன்னும்...
5. பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:
”ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர்
ஆச்சார்யண ஸமன் வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிருபஸ்சேவ மஹாதேவ
மருஸ்தல நிவாஸினம்” (பவிஷ்ய புராணம் 3,3,5-8)
இதன் பொருள்:
“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்.”
மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது.
”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்” என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3)
மேலும் காண்க, அதர்ணவேதம் 20வது காணம், ரிக்வேதம், மந்திரம்:5, சூக்தம்:28
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள், திருக்குர்ஆனில்:
2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).
2:128. ”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:129. ”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (என்றும் பிரார்த்தித்தார்கள்)
இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம் ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.
இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:
”உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)
”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம், 18:18)
புதிய ஏற்பாட்டில்:
மோசே (மூஸா (அலை) பிதாக்களை நோக்கி, உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார், அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்காளக. (அப்போஸ்தலர்,3:22)
நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள். அவர்களுடைய சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களது பரம்பரையில் வந்தவரே இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (இப்னு கஸீர் அடிக் குறிப்பு)
மேலே சில இந்து புராண மந்திரங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வருகை மற்றும் அவர்களை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விளக்குவதை அறிந்தோம்,இன்று சில இந்து புராணங்கள் இஸ்லாம் மற்றும் ஒரே இறைவனாகிய அல்லாஹ் குறித்து என்ன சொல்கிறது என் ஆய்வோம்...
இந்து மத வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் வேதங்களாகும்.
யஜூர் வேதம் (32:3)
“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் – யஜூர் வேதம் பக்கம் 377)
அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)
“அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே” இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)
அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
‘தேவ் மஹா ஓசி” கடவுள் மகா பெரியவன்
குர்ஆன் கூறுகிறது:
…அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.
குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை “காலிக்” எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ”அவனை உருவகிக்க முடியாது” என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ”ரப்” என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
ரிக் வேதம் (8:1:1)
”மா சிதான்யதியா ஷன்ஸதா” அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.
(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)
யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ”யஜூர் வெது சம்ஹிதி-ராலப்” (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)
குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)
ரிக் வேதம் (6:45:16)
”யா எக்கா இட்டமுஸ்ததி” தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.
இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்
”ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்” கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!
ஆக இந்து வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.
இப்படி மற்ற மதங்களும் அல்லாஹ் ஒருவன் என்றும் அவனை அல்லாது மற்றதை கல்லை,மரத்தை வேறு எதையும் வணக்குதல் கூடாது என்றும் மட்டுமே கூறி இருக்க,அன்புள்ளம் கொண்ட இந்து நண்பர்களே,சிந்தியுங்கள்.உங்கள் முன் எடுத்துக்காட்டப்படுவது அனைத்தும் இந்து மத வேத நூல்களில் உள்ளவைதாம். சந்தேகமிருப்பின் சமஸ்கிருத வேத விற்பன்னர்களிடம் கேட்டு உண்மை படுத்திக்கொள்ளுங்கள். வாருங்கள் நண்பர்களே,
நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் இஸ்லாம்தான், நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் நபிகள் நாயகம் மட்டுமே.
நாம் எல்லாரும் ஒன்றுகூடி நம் அனைவரையும் படைத்த ஒரே அல்லாஹ்வை வணங்குவோம் மறுமையில் சுவனத்தை சுவைப்போம். இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் நேர்வழி தர போதுமானவன்
நன்றி:- அதிரை எக்ஸ்பிரஸ்
4 கருத்துரைகள்:
interesting thought
. . . . . . . . . . . . . . . . :)
கருத்துக்கு மிக்க நன்றி நண்பர்களே (ad483 &ad133). உங்கள் பெயரை சொல்லி இருக்கலாமே!!
சகோ..
இந்துமதத்தில் இறைவனின் உருவம் மற்றும் உருவமற்ற ஆகிய இரண்டையும் தான் கூறுகிறது. அதில் உருவமற்ற வசனத்தை மட்டும் எடுத்துவிட்டுஇது தான் வேதங்களின் ஒட்டுமொத்த கருத்து என கூறுவது அறியாமையே!
அதே இந்துமத வேதங்களில் தான் இப்படியும் கூறுகிறது...
யஜீர் வேதம்
ஷவோ தேவே எக நாராயணா ந துவித்யச கர்ஷித்
பகவான் ஸ்ரீநாராயணரே ஒருவரே முழுமுதற் கடவுள். அவரைத்தவிர இரண்டாவதாக வேறு எவறும் இல்லை.
வேத இலக்கியங்களில் இறைவனின் நிலைகளை சொல்வது ....
dve vāva brahmaṇo rūpe, mūrtaṃ caivāmūrtaṃ ca [Brh. Up - 2.3.1]
God (Brahman) has two modes, formless (nirakara, asambhuta) as well as form (sakar, sambhuta).
இறைவன் (பிரம்மன்) என்பது இரண்டு நிலைகளில் அறியப்படுகிறது, அது உருவமில்லா தன்மை (asambuta) மற்றும் உருவமுள்ள தன்மை(sakar, sambhuta). - யஜுர் வேத 2.3.1 (ப்ரஹதாரண்ய உபநிஷத்)
அதாவது, ஒரே இறைவனின் இரண்டு வித அம்சங்களே இந்த நிர்குண, சகுன பிரமன் ஆகியவை. தனது பக்தர்ளுக்கும் மட்டுமே அவர் உருவமுள்ள சகுண பிரம்மனாக காட்சியளிக்கிறார். ஆனால் அறிவற்ற அபக்தர்களுக்கு அவர் தனது அந்தரங்க சக்தியால் (ப்ரஹ்ம ஜோதி எனும் ( இதுவே நிர்குண நிலை) திரையினால் மறைக்கப்பட்டுள்ளார்.
இது வேத சாஸ்திரம்- ஈஷோபநிஷத்திலும் (மந்திரம் 15) கூறுகிறது..
“எம்பெருமானே, அகிலங்களை எல்லாம் பராமரிப்பவர் நீரே, உமக்கு பக்தித் தொண்டு ஆற்றுவதே அறக் கொள்கைகளில் தலைசிறந்தாகும். எனவே, என்னையும் பராமரிக்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன். உமது திவ்யமான ரூபம், யோக மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. பிரம்மஜோதியே அந்தரங்க சக்தியின் திரையாகும். உமது ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹத்தை (நித்தியமான அறிவு நிறைந்த ஆனந்த ரூபத்தினை) காணவிடாமல் என்னைத் தடுக்கும் இந்தப் பேரொளியினை தயவு செய்து விலக்குவீராக.”
ஆனந்தமும் அறிவும் நிறைந்த பரம புருஷ பகவானின் திவ்ய ரூபம், அவரது அந்தரங்க சக்தியான பிரம்மஜோதியினால் கவரப்பட்டுள்ளதால், அறிவில் குன்றியவர்களான அருவவாதிகள் பரமனைக் காண முடியாது.
"மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே" - பகவான் கிருஷ்ணர் - கீதா 14-27
இதில் பகவான் கிருஷ்ணர் தன்னிடமிருந்தே அருவ பிரம்மன் (ஜோதி-உருவமில்லா தன்மை) வருவதாக சொல்கிறார். எனவே, பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள், அவரை காணவிடாமல் தடுக்கும் ஜோதியே (உருவமில்லா தன்மை ) என மேலே மிக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
@Ananth A.
நண்பரே . உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் முன், சிலவற்றை உங்களுக்கு சொல்லவிரும்புகிறேன்.
1. ஒரே இறைவன், அவனுக்கு உருவம் இல்லை என மேலே குறிப்பிட்டுள்ளதிலேயே 15 ற்கும் மேற்பட்ட வசனங்கள் உள்ளன.
2. நீங்கள் குறிப்பிட்ட (யஜீர் வேதம்: ஷவோ தேவே எக நாராயணா ந துவித்யச கர்ஷித்) வசனத்திற்க்கு ஆதாரம் இடுமாறு கேட்டு கொள்கிறேன். இதிலும் கடவுளுக்கு பெயர் கொடுத்துள்ளதே தவிர. கடவுளுக்கு உருவம் உள்ளது என்று
குறிப்பிடவில்லை .
3. //இறைவன் (பிரம்மன்) என்பது இரண்டு நிலைகளில் அறியப்படுகிறது, அது உருவமில்லா தன்மை (asambuta) மற்றும் உருவமுள்ள தன்மை(sakar, sambhuta). - யஜுர் வேத 2.3.1 (ப்ரஹதாரண்ய உபநிஷத்)
//
ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழைத்தனர். இவை அனைத்தும் அவனின்
தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.
வேதங்கள் என்பது இறைவனால் அருளப்பட்டது. இறைவன் தன் நிலையை, ஏதாவது ஒருநிலையைத்தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு இரட்டை நிலை கொண்ட வசனங்கள் இருக்குமெயானால், அவ்வேதத்தின் உண்மைதன்மையை உங்கள்
அறிவிற்கே விட்டுவிடுகின்றேன்.
வசனங்கள் மறுபடுமானால், பழமையான ரிக் வேதத்தில் பாருங்கள்.
ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ”ரப்” என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம்
மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.
குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)