ஆஷூரா என்றால் பத்தாம் நாள் என்று பொருள். யூதர்களின் திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளுக்கும் ஆஷூரா என்றே பெயர் கூறப்படும். முஹர்ரம் மாதத்தின் 10 – ஆம் நாளை ஆஷூரா தினமாக இஸ்லாம் அறிமுகப் படுத்தி, அன்றைய நாளின் நோன்பிற்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது.
இது மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் கூட்டத்தினரையும் அவர்களின் எதிரியான ஃபிர்அவ்னிடமிருந்தும் அவனது படையின ரிடமிருந்தும் அல்லாஹ் காப்பாற்றிய நாளாகும்.
இதற்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா (அலை) அவர்களும் நோன்பு நோற்னர்.இந்நாளை யூதர்களும் கிருத்துவர்களும் சிறப்பித்து வந்தனர். அவர்களுடை செயல்களுக்கும் நம்முடைய
வணக்கங் களுக்குமிடையே வேறுபாடு இருக்கவேண்டும் என்பதற்காக, நான் எதிர் வரும் வருடம் உயிருடன் இருந்தால் 9-ஆம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால் அந்த வருடமே நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். எனினும் அவர்களின் விருப்பத்திற்கிணங்க முஹர்ரம் மாதம் 9-ஆம் நாளும், 10- ஆம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத் ஆகும்.
இது ஆரம்பத்தில் பர்ளான – கடமையான – நோன்பாக இருந்துவந்தது. ரமளான் மாத நோன்பு விதியாக்கப்பட்தும் இது அதற்கடுத்த இடத்தைப் பெற்று சுன்னத்தான நோன்பாக மற்றப்பட்டது. எனினும் இந்த நோன்பு ரமளான் மாத நோன்பிற்கு அடுத்த சிறந்த நோன்பாகும்.
இந்த நோன்புகளை நோற்றால் முந்தைய ஒரு வருட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் தோழியர்களும் -சிறுவர்களும் கூட- இந்நோன்பை நோற்றிருக் கின்ளனர். இந்த நோன்பின் மூலமாக அல்லாஹ் நமக்களிக்கும் வெகுமதியை பெற்றுக்கொள்ளவும் , நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படவும் ஆஷூரா நோன்பு நோற்போமாக!
ஆஷூரா நோன்பைப் பற்றிய நபிமொழிகள்
ரமலான் நோன்பிற்கும் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும். (ஆதார நூல் :திர்மிதி)
ஆஷூராவின் நோன்பு முந்தைய வருடத்துப் பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. {ஆதார நூல் : புகாரி)
ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இது இன்னுமொரு சான்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
” ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் ” ( முஸ்லிம், அஹ்மத்)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
” ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் ” ( முஸ்லிம், அஹ்மத்)
ஆஷூரா நாளன்று நபி (ஸல்) அவர்கள் தானும் நோன்பு நோற்று, பிறரையும் நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது நபித் தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இது யூதர்களும் கிருத்துவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் வருடம் நான் –உயிருடன்- இருந்தால் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்றார்கள். (ஆதார நூல் : முஸ்லிம்)
நன்றி:- அல்பாக்கவி. காம்
0 கருத்துரைகள்:
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)