December 5, 2010

வக்ஃபு வாரியம் சார்பில் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி

மயிலாடுதுறை பகுதியில் உள்ள நீடுர் கிராமத்தில் வக்ஃபு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார்.


இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது: மருத்துவக் கல்லூரி தொடங்க முதலில், தமிழ்நாடு வக்ஃபு வாரியம் நீடுரில் மருத்துவமனையை நிறுவ உள்ளது. இதற்கான கட்டடங்கள் கட்டும் பணியும் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.


அந்தப் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்படும் நோக்கில், 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.  மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்து ஓராண்டு கழிந்த பின்னர், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதி கோரப்படும். அனுமதி பெற்ற பின்பு, 2012-ம் கல்வி ஆண்டில்


 மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 100 இடங்கள் கொண்ட கல்லூரியில், 50 இடங்கள் வக்ஃபு வாரியத்தின் வசம் இருக்கும். மீதம் உள்ள 50 இடங்கள் அரசுக்கு கொடுக்கப்படும். 


மாணவர் சேர்க்கையின்போது, அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். வேறு எந்த வித நன்கொடையும் வசூலிக்கப்படமாட்டாது. மருத்துவமனை மற்றும் கல்லூரி கட்டுவதற்கான 23 ஏக்கர் இடத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜாமியா மிஸ்பாஹூல் ஹூதா மதரஸô வழங்கியுள்ளது.  மருத்துவக் கல்லூரியை நிர்வாகிக்க வக்ஃபு வாரியமும், மதரஸôவும் இணைந்து அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கவுள்ளன.

கல்லூரியை திறம்பட நடத்துவதற்காக ரூ.60 கோடி நிதி திரட்ட வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக நிதி திரட்ட வக்ஃபு வாரியம் பல்வேறு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் நடத்த முடிவு செய்துள்ளது என்றார் அவர்.
நன்றி:- தினமணி 

0 கருத்துரைகள்:

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்