April 18, 2010

ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.


நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??



ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.
ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லாதூங்கிட்டுருக்கும்போது
வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒருதிருடன் வந்துட்டான்.
சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்நல்ல உறக்கத்திலிருக்க,
திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.



சரியா சோறே போடறதில்லை,
இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.
அதைப்பார்த்த கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான்,
குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட்
பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது.
சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி
ஒருகட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி.
கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு
கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.



நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா


சீன் போட்டாஇப்படித்தான்.






இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...
கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி,
கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு
வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான்.
அடுத்த நாள் கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான்.
நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.



கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட
இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு
முதலாளியின் எல்லா வேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது.
நாய் சுகமாக வேலையே செய்யாமல் கழுதையைபார்த்து
சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது
வேறு வேலைக்கு சிவி அனுப்பிகிட்டிருக்கு...



நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.

நன்றி Mr. Joseph John Henry

5 கருத்துரைகள்:

M.A.K said...

ரொம்ப ரசிச்சு சிரிச்சோம்
நல்ல பதிவு

Abu Nadeem said...

MAK, thanks for all comments :)

Anonymous said...

supara irukunko....!!

NIZAMUDEEN said...

நகைச்சுவையாய்...
அதே நேரத்தில் இரு கோணங்களில்
கதை வித்தியாசமாய் இருக்கிறது.
நமது கடமைக்கு உண்டான கூலி
நமக்கு கிடைத்தே தீரும்.

Abu Nadeem said...

//நமது கடமைக்கு உண்டான கூலி
நமக்கு கிடைத்தே தீரும்.//

சரியாக சொன்னிர்கள்.. கருத்துரைக்கு மிக்க நன்றி

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்