June 9, 2016

ஈக்களை பற்றிய அறிவியல் பதிவு.

உங்களால் ஒரு ஈயை கூட படைக்க முடியாது! ( திருக்குர்ஆன் 22:73)
ஈக்களை பற்றிய அதிக தகவலுடன் கூடிய அறிவியல் பதிவை இன்று நாம் பார்ப்போம். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் : “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி அறிவியல் ஆய்வாளர்களுக்கு எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆய்வுகளை மேற்கொண்டனர்எனவே ஒரு நாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப் போட்டு அதில் ஊறவைத்தனர் மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடைபோன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச் சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டனர். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது.” என்கிறார்.
 
வருகைத்தந்தவர்கள்