நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்க முடியும்.
மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தித் தள்ள முடியும்.
நெருப்புக் கோழியால் ஒரே தாவலில் 7 மீட்டர் தூரம் தாண்ட முடியும்.
3,000 அடி உயரத்திலும் புறா தன் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும்.
எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழ முடியும்.
எறும்பு தன் எடையைப் போல 50 மடங்கு எடையை இழுக்க முடியும்.
கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்த முடியும்.
யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்மவும் முடியாது, தூங்கவும் முடியாது.
பன்றிகள் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது.
யானையால் துள்ளிக் குதிக்க முடியாது.
முதலைகளால் அதன் நாக்குகளை வெளியே நீட்டி இரைகளை பற்ற முடியாது.
தட்டான் பூச்சி பறந்தாலும் சரி, நின்றாலும் சரி அதனால் இறக்கையை மடக்கி வைக்க முடியாது.
முதலைகளும், திமிங்கலங்களும் நீரில் வாழ்ந்தாலும் அவற்றால் நீருக்குள் மூச்சு விட முடியாது.
பூனைகளுக்கு இனிப்புச் சுவை உணர முடியாது.
Thanks : webdhunya
August 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துரைகள்:
பொது அறிவுச் செய்திகள்;
சுவையான தொகுப்பு!
நன்றி நிஜாமுதீன் அண்ணன் அவர்களே !
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)