April 17, 2010

ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி

ஜித்தா, சவூதி அரேபியா. தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி சென்ற வெள்ளிக்கிழமை இஸ்திராஹா சஃப்வாவில் நடந்தது. அது சமயம் ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.

அடிக்கடி பல்வேறு புதிய நிகழ்ச்சிகளை

நடத்தி சாதனை படைத்து வரும் தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பினர் இந்த முறை ஆறாவது குடும்ப ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வெள்ளியன்று ஏற்பாடு செய்திருந்தனர்.



இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் குடும்பத்தினர் குழந்தைகள் சகிதமாய் கலந்துக்கொண்டனர். காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் மாலை எட்டு மணிக்கு முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி, ஸ்கிப்பிங், ஓட்டப்பந்தயம், மூஸிக்கள் சேர், மெல்ல நடப்பது, போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு பிரத்தேகமாக ஸ்கிப்பிங், அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மூஸிக்கள் சேர் நடத்தப்பட்டன. அதுபோல் ஆண்களுக்காக அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மூஸிக்கள் சேர், வாலிபால், கயிர் இழுத்தல், செய்கை முறையில் பதிலளி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு ஏராளமான பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


முன்னதாக வந்திருந்த அனைவர்களுக்கும் காலை சிற்றுண்டியாக இட்லி, வடை சாம்பார் சட்னியுடன் வழங்கப்பட்டன. மதியம் மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.


இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தஃபாரெஜ்-ஜித்தா (TAFAREG-Jeddah) அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

Inneram News:
http://www.inneram.com/201004107746/tafareg-jeddah-organised-family-meet

1 கருத்துரைகள்:

M.A.K said...

//இட்லி, வடை சாம்பார் சட்னியுடன் வழங்கப்பட்டன. மதியம் மட்டன் பிரியாணி வழங்கியதுடன், நிகழ்ச்சி முடியும் வரை குடிநீர், தேநீர், பிஸ்கட், குழந்தைகளுக்காக சிப்ஸ், ஜூஸ் போன்றவைகள் பரிமாறப்பட்டன.//

உண்மையிலேயே பல்'சுவை' நிகழ்ச்சிதான்

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க!!!
(Anonymous பெயரில் வரும் கருத்துரைகள் வெளியிடப்படாது)

கருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):

Comments

 
வருகைத்தந்தவர்கள்