November 7, 2014

கணக்கு புதிர்கள் - 3

புதிர்#1). ஒரு தக்காளி  வியாபாரி தக்காளிபழங்களை கூறு கட்டி விற்க பார்க்கிறார் அவர் வைத்திருக்கும் தக்காளிபழங்களை,  இரண்டிரண்டாக கட்டினால் ஒரு தக்காளிபழமும், மூன்று மூன்றாக கட்டினால் இரண்டு தக்காளிபழங்களும், நான்கு நான்காக கட்டினால் மூன்று தக்காளிபழங்களும், ஐந்துஐந்தாக கட்டினால் நான்கு தக்காளிபழங்களும்,  
ஆறு ஆறாக கட்டினால் ஐந்து தக்காளிபழங்களும் மீறுகிறது. ஏழு ஏழாக கட்டினால் மட்டுமே சரியாக கட்ட முடிகிறது.

அப்படியானால் அவர் எவ்வளவு தக்காளிபழங்களை வைத்திருந்தார்.
 
வருகைத்தந்தவர்கள்