December 20, 2012

கணக்கு புதிர்கள் - 1

மூளைக்கு வேலையாக ஒரு சில கணக்குப்புதிர்களை இங்கே தந்துள்ளேன்.. நீங்கள் முயற்சித்துப் பார்த்து உங்கள் பதிலை கீழுள்ள கமெண்ட் - ல் தாருங்கள். உங்கள் ஆர்வத்தை பொறுத்தே மேலும் புதிர்கள் இட முயற்ச்சிப்பேன் (இறைவன் நாடினால்)......... 

December 11, 2012

அரசு வேலைவாய்ப்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

December 8, 2012

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்.


நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம்.  மேலும் பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம்.

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் முதல் வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு  தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.
 
வருகைத்தந்தவர்கள்